27 வருடம் கழித்து ரஜினிக்கு பின்னடைவு.! கெத்து காட்டும் விஸ்வாசம்.!

0
2097
- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படங்கள் திரைக்கு வந்தாலே பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடிக்க என்றுமே தவறியதில்லை. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான 2.0 திரைப்படம் உலகம் முழுவதும் பல்வேறு வசூல் சாதனைகளை செய்திருந்தது.

-விளம்பரம்-

ஆனால், தற்போது வெளியாகியுள்ள பேட்ட அஜித்தின் விஸ்வாசம் திரைப்படத்திற்கு முன்னாள் பின்னடைவை சந்தித்துள்ளது என்பது தான் உண்மை. கடந்த 10 ஆம் தேதி வெளியான பேட்ட மற்றும் விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதையும் படியுங்க : பேட்ட Vs விஸ்வாசம் இரண்டாம் நாள் வசூல் நிலவரம்.! 

- Advertisement -

ஆனால், தமிழகத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் விஸ்வாசம் படத்தை விட கம்மியான வசூலை செய்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸீல் பேட்ட படம் இரண்டாம் இடத்தை தான் பிடித்துள்ளது.

இப்படி ரஜினியின் திரைப்படம் முதல் நாளில் இரண்டாம் இடத்தை 27 வருடங்களுக்கு பிறகு நடக்கும் விசயம். 1992, அக்டோபர் 25 ல் ரஜினியின் பாண்டியன் படமும், கமல்ஹாசனின் தேவர் மகன் படமும் களத்தில் இறங்கின. அதில் முதல் நாள் வசூலில் ரஜினியின் பாண்டியன் படம் இரண்டாம் இடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement