பேட்ட பட டீஸரில் பார்த்த டார்ச் லைட் சண்டை காட்சி.! அது இது தான்.! கார்த்திக் சுப்புராஜ்.!

0
563
Petta

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘பேட்ட ‘ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.மேலும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படத்தின் பல டீஸர்களையும், சிறப்பு காட்சிகளையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் நீக்கபட்ட காட்சிகள் குறித்து இந்த படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் சிறப்பு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இதையும் படியுங்க : சத்தியமா அந்த எண்ணத்தில் அந்த வசனத்தை வைக்கல.! சிவா பேட்டி.! 

- Advertisement -

இந்த படத்தின் டீஸர் ரஜினிகாந்த் பிறந்தநாளை கடந்த டிசம்பர் 11 ஆம் தேதி வெளியாகி இருந்தது. அதில் ரஜினிகாந்த இடம்பெற்ற டார்ச் லைட் சண்டை காட்சி தான் இந்த படத்தில் மிகவும் எதிர்பார்க்கபட்ட சண்டை கட்சியாக இருந்தது.

ஆனால், அந்த காட்சி ‘பேட்ட’ படத்தில் இடம்பெறவில்லை. இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசிய கார்த்திக் சுப்புராஜ்,
தளபதி திரைப்படத்தில் அனைவராலும் ரசிக்கப்பட்ட பேக் ஷாட் காட்சியை பேட்ட படத்திலும் வைக்க திட்டமிட்டோம். ஃபிளாஷ்பேக்கில் வரும் அந்த பேக் ஷாட் காட்சியை முதலில் டிரைலருக்காக எடுத்தோம், அந்த காட்சிக்கு கூடுதல் வரவேற்பு இருந்ததால் அதனை படத்தில் சேர்க்க நினைத்தோம். ஆனால், படத்தின் நீளம் காரணமாக அந்த காட்சிகள் நீக்கபட்டது என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement