அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள விஸ்வாசம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஒன்றரை ஆண்டு கழித்து அதிலும் பொங்கல் திருநாளை முன்னிட்டு இந்த படம் வெளியாகியிருந்தது ரசிகர்களுக்கு டபுள் சந்தோசம்.
இந்த படத்தின் ஒரு சண்டை காட்சியில் தனது மகளிடம் பேசிகொண்டே எதிரிகளை தும்சம் செய்வார் தல. அப்போது தனது மகளிடம் ‘இதுவரை எத்தனை போட்டியில் மா ஜெயிச்சிருப்ப’என்று கேட்பார். அதற்கு அவர் 62 என்று சொன்னதும் ‘அடேங்கப்பா’ என்று சொல்வார் அஜித்.
இதையும் பாருங்க : மாரி படம் செய்ததே அந்த ஒரு சாதனை தான் அதையும் அடிச்சி தூக்கிட்டார் நம்ம தல.!
இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில் விஜய் இதுவரை 62 படங்களில் நடித்துள்ளார். எனவே, விஜய்யை தாக்கி தான் இந்த வசனம் இருப்பதாக சமூக வலைதளத்தில் பரவலாக பேசப்பட்டது. ஆனால், அதனை மறுத்துள்ளார் இயக்குனர் சிவா.
இதுகுறித்து அவரிடம் கேட்கப்பட்ட போது, கண்டிப்பாக விஜய்யை தாக்கி அந்த வசனத்தை உருவாக்கவில்லை. உண்மையாக சொல்கிறேன், அதுபோன்ற எண்ணம் எனக்கு இல்லவே. அதே போல பேட்ட படத்தின் டீசருக்கு பதிலடியாக விஸ்வாசம் படத்தில் வசனங்கள் இருப்பதாக சில செய்திகளும் வலம் வந்தது. ஆனால், அதுவும் உண்மை இல்லை. சொல்லப்போனால் 10 நாட்களுக்கு முன்பே படத்தின் ட்ரைலர் கட் செய்துவிட்டோம். இது தற்செயலாக நடந்தது தான்என்று கூறியுள்ளார்.