பேட்ட படத்தை மிஞ்சிய விஸ்வாசம்.! அஜித் படம் செய்த வசூல் சாதனை.!

0
293

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பேட்ட மற்றும் விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்களின் வசூல் நிலவரம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த 10 ஆம் தேதி வெளியான இந்த இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த இரண்டு படங்களில் பேட்ட படத்திற்கு தான் ஆரம்பத்தில் வரவேற்பு பெரிதாக இருந்தது. ஆனால், விஸ்வாசத்திற்கு தொடர்ந்து சிறப்பான விமர்சனம் வந்ததால் பொங்கல் விடுமுறை நாட்களில் விஸ்வாசம் படத்திற்கு தான் குடும்பங்கள் அனைத்தும் படையெடுத்து.

இந்நிலையில் பேட்ட மற்றும் விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்களின் வசூல் பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் விஸ்வாசம் இதுவரை 125 கோடி வசூல் செய்துள்ளதாக KJR நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதுவரை வந்த அஜித் படங்களிலேயே இத்தனை குறைவான நாட்களில் 125 கோடி வசூல் செய்த முதல் படம் இது தான் என்பது குறிபிடத்தக்கது. சூப்பர் ஸ்டாரின் பேட்ட படம் 100 கோடி வசூல் செய்துள்ளதாக சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.