ஜல்லிக்கட்டை மையமாக வைத்து வெற்றிமாறன் தயாரித்துள்ள ‘பேட்டைக்காளி’ – முழு விமர்சனம்.

0
2501
- Advertisement -

வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் பேட்டை காளி. இது ஒரு வெப் சீரிஸ். அண்ணனுக்கு ஜே படத்தை இயக்கிய ராஜ்குமார் தான் இந்த வெப் சீரிசை இயக்கியிருக்கிறார். மேற்கு தொடர்ச்சி மலை ஆண்டனி இதில் ஹீரோவாக நடித்திருக்கிறார். கலையரசன், கிஷோர், வேலராமமூர்த்தி, ஷீலா உட்பட பல நடிகர்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஜல்லிக்கட்டை மையமாக வைத்து இந்த வெப் சீரிஸ் உருவாகி இருக்கிறது. இந்த வெப் சீரிஸ்க்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். இந்த வெப் சீரிஸ் இரண்டு எபிசோடுகள் வெளியாகியிருக்கிறது.

-விளம்பரம்-

கதைக்களம்:

பேட்டை காளி என்கிற ஜல்லிக்கட்டு காளையை வளர்க்கும் பெண் கதாபாத்திரத்தில் ஷீலா நடித்திருக்கிறார். சிவகங்கை மாவட்டம் அரளிப்பாறையை சுற்றி படத்தின் கதை அமைந்திருக்கிறது. தாமரைக் குளத்துப் பண்ணையில் விவசாய கூலிக்காரர்களாக தலைமுறை தலைமுறையாக வேலை செய்து வருபவர்கள் முல்லையூர் மக்கள். ஒரு கட்டத்தில் இவர்கள் சுயமாக வாழ வேண்டும் என்று நினைத்து தங்கள் உருவாக்கிய நூற்றுக்கணக்கான விவசாய நிலங்களில் இருந்து ஒரு சிறு பகுதியை பிரித்து தர சொல்லி பண்ணையாளர்களிடம் கேட்கிறார்கள்.

- Advertisement -

தன்னிடம் அடிமை செய்த நபர்கள் முதலாளி ஆவதை விரும்பாத பண்ணையார்கள் நிலங்களை பிரித்துக் கொடுக்க முடியாது என்று கூறி விடுகிறார்கள். அவருக்கு பிறகு அவருடைய வாரிசு மணி சேகர பண்ணையாரும் நிலத்தை பிரித்து கொடுக்க முடியாது என்று மறுத்துவிடுகிறார். இதனால் அங்கிருந்து முல்லையூர் மக்கள் வெளியேறி கிடை மாடு வளர்த்து முன்னேறி வருகிறார்கள். அந்த மாடுகள் தான் அவர்களின் சொத்தாகவும் வாழ்வாரதாகவும் மாறிவிடுகின்றது.

மேலும், மணிசேகர பண்ணையாரின் மகன் செல்வசேகர பண்ணையார் ஜல்லிக்கட்டு வளர்க்கிறார். இந்த முறை நிலத்தால் அல்ல ஜாதி ஆதிக்கத்தால் முல்லையூர் மக்களை ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளக்கூடாது என்று தடை செய்கிறார்கள். அந்த பகுதியை சேர்ந்த கலையரசன் பண்ணையாரின் காளையை அடக்கி விடுகிறார். இதனால் இரண்டு ஊருக்கும் பகை ஏற்படுகிறது. அதற்கு பிறகு என்னென்ன சம்பவங்கள் நடக்கிறது என்பது தான் பேட்டை காளி வெப் சீரிஸின் முதல் இரண்டு எபிசோடுகளின் கதை.

-விளம்பரம்-

ஜல்லிக்கட்டு காளையை குறித்து பல விஷயங்களை இயக்குனர் காண்பித்திருக்கிறார். பண்ணையாளர்களிடம் அடிமைத்தனமாக வாழ்ந்து அவர்கள் முன்னேற நினைக்கும் மக்களுடைய நிலையை அழகாக சொல்லி இருக்கிறார். தன்னுடைய இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் கலையரசன். ஜாதி வெறி பிடித்தவர்களுடைய குணத்தை தெளிவாக காண்பித்திருக்கும் விதம் பாராட்டுகளை பெற்று இருக்கிறது. படத்தில் கிஷோர் தன்னுடைய அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

மேலும், சில இடங்களில் ஜல்லிக்கட்டு விஷயத்தில் செயற்கை தனமும் தெரிகிறது. வெப் சீரிஸ் பார்ப்பது போன்று இல்லாமல் ஒரு திரைப்படத்தை பார்க்கும் உணர்வை ஏற்படுத்த முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர். தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் விதமாக இந்த வெப்சீரிஸ் உருவாகி இருக்கிறது. இதுவரை சொல்லப்படாத ஆதிக்க அரசியலை காண்பித்து இருக்கிறார்கள். அதேபோல் வளர்க்கப்படும் மாடுகளை தங்கள் குடும்ப உறுப்பினர்கள் போலவே பாவித்து இருக்கும் காட்சிகள் எல்லாம் அருமையாக இருக்கிறது. ஆதிக்கம், வஞ்சம்,பகை என பல விஷயங்கள் இந்த வெப்சீரிஸில் பேசப்பட்டிருக்கிறது. அடுத்து என்ன நடக்கும்? என்று பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement