வட இந்திய புகைப்பட கலைஞர் ஒருவர் அட்லீயின் நிறம் குறித்து கேலி செய்து இருக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மிகப் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக அட்லீ திகழ்ந்து வருகிறார். இவர் சினிமா உலகில் இயக்குனர் மட்டும் இல்லாமல் திரைக்கதை, எழுத்தளார் என பல முகங்களைக் கொண்டு திகழ்கிறார்.

இவர் ராஜா ராணி படத்தின் மூலம் தான் சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமாகி இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. பின் இவர் தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருந்தார். இதில் விஜய்யை வைத்து முதலாக தெறி என்ற படத்தை இயக்கி இருந்தார். ரசிகர்கள் எதிர்பார்த்த மாதிரி இந்த படம் ஆக்ஷன், சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த கலவையாக இருந்ததால் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது.
விஜய்-அட்லீ படம்:
பின் அட்லீ மெர்சல் படத்தை இயக்கி இருந்தார். இளைய தளபதியாக இருந்த விஜய் தளபதி விஜய் ஆக ஆனதே மெர்சல் படத்திற்குப் பிறகு தான். இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இதனை தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜயை வைத்து பிகில் என்ற படத்தை அட்லீ இயக்கி இருந்தார். இந்த படத்தில் விஜய் அவர்கள் ராயப்பன், மைக்கேல் என்று அப்பா – மகன் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
View this post on Instagram
ஜவான் படம் :
படத்தில் மைக்கேல் கதாபாத்திரத்தை விட ராயப்பன் கதாபாத்திரம் தான் ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் பேசப்பட்டு இருந்தது.இதன் மூலம் அட்லீ அவர்கள் தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனர்களுக்கு இணையான அந்தஸ்திற்கு உயர்ந்தார். பிகில் படத்தைத் தொடர்ந்து அட்லீ அவர்கள் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான ஷாருக்கானை வைத்து 'ஜவான்' படத்தை இயக்கி வருகிறார்.
மும்பையில் இருந்து வரும் அட்லீ :
அதோடு அட்லீ – ஷாருக்கான் கூட்டணியில் உருவாகும் இந்த படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் நயன்தாரா, ப்ரியாமணி, யோகிபாபு உட்பட பல நடிகர்கள் நடித்து வருகிறார்கள். இந்த படம் அடுத்த ஆண்டு ஜூன் இரண்டாம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படம் ஆரம்பித்ததில் இருந்தே அட்லீ மும்பையில் தான் இருந்து வருகிறார். இருப்பினும் அடிக்கடி சென்னைக்கும் விசிட் அடித்து வருகிறார்.

நிறத்தை கேலி செய்த புகைப்பட கலைஞர் :
அந்த வகையில் சமீபத்தில் சென்னையில் இருந்து மும்பை புறப்பட்டார் அட்லீ. இப்படி ஒரு நிலையில் அட்லீ மும்பையில் உள்ள தனியார் விமான நிலையம் ஒன்றிற்கு ஷாருக்கானுடன் வந்து இருந்தார். அப்போது அங்கு இருந்த வட இந்திய புகைப்பட கலைஞர்கள் சிலர் இட்லி சார், இட்லி சார் என்று அழைத்தனர். அதிலும் ஒரு புகைப்பட கலைஞர் 'இவ்ளோ கருப்பா இருக்கான் தெரியவே இல்ல' என்று கேலி செய்து இருக்கும் ஆடியோவும் அந்த வீடியோவில் அப்பட்டமாக கேட்டு இருக்கிறது.






