தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் அஜித் குமார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் தல அஜித்தின் “வலிமை” படம் குறித்து அதிர்ச்சியிடும் தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவந்தது . இதனால் தல ரசிகர்கள் எல்லாம் மிகுந்த கவலையில்ஆழ்ந்தனர் . இந்த வருடம் அஜித் அவர்களின் நடிப்பில் வெளிவந்த ‘விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை’ ஆகிய இரண்டு படமுமே மக்களிடையே நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றது.
https://twitter.com/Thalaviky57/status/1230751474524667904
அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் மாஸ் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத்தும், தயாரிப்பாளர் போனிகபூர் இருவரும் மீண்டும் இணைந்து தல அஜித்தை வைத்து “வலிமை” படத்தை உருவாக்கி வருகிறார்கள். இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவாளராக உள்ளார். சமீப காலமாகவே தல அஜித் அவர்கள் படங்களில் பெப்பர் சால்ட் லுக்கில் இருந்த நிலையில் இந்த வலிமை படத்தில் பிளாக் ஹேர் ஸ்டைலில் அதுவும் இளமை தோற்றத்துடன் நடிக்கிறார்.
இதையும் பாருங்க : அவர் தாலி கட்ட கழுத்தை நீட்டுவேன். ஒருவழியாக திருமணம் குறித்து பேசிய அனுஷ்கா.
இந்த படத்தில் தல அஜித் அவர்கள் போலீசாக நடிக்கிறார். ஹீரோயினியும் போலீஸ் கேரக்டர் தான் என்றும் சொல்லப்படுகிறது. அது போல இந்த வலிமை படத்தில் அவர் ஒரு ரிஸ்க் எடுத்து உள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் பைக் காட்சி ஒன்றில் அஜித் பைக் ஓட்டிய போது எதிர்பாராதவிதமாக அவர் பைக்கில் இருந்து தவறி விழுந்துள்ளார். இதனால் அவருக்கு ஒரு சில சிறுகாயங்கள் ஏற்பட்டிருக்கிறது. பின்னர் அவர் மருத்துவ உதவிகளை எடுத்துக்கொண்டு உடனடியாக மீண்டும் சூட்டிங்கிற்கு திரும்பி அந்த காட்சிகளில் நடித்து முடித்துள்ளார்.
https://www.instagram.com/p/B80uGj9nMNQ/
மேலும், அஜித் குணமடைய அஜித் ரசிகர்கள் #GetWellSoonThala என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி இருந்தனர் . இந்த ஹேஷ் டேக் ட்ரெண்டிங்கில் வந்தது. இந்த நிலையில் அஜித்தின் சில சமீபத்திய புகைப்படங்களும் விடீயோக்களும் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள அஜித் விருந்தினர்களை மாலை போட்டு வரவேற்கிறார். வலிமை படத்தின் விபத்தில் இருந்து மீண்டு தற்போது அஜித் தரிசனத்தை கண்டுள்ள தல ரசிகர்கள் குஷியில் ஆழ்ந்த்துள்ளார்கள்.





