அவர் தாலி கட்ட கழுத்தை நீட்டுவேன். ஒருவழியாக திருமணம் குறித்து பேசிய அனுஷ்கா.

0
62096
Anushka
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் பல வருடங்களாக முன்னணி நடிகையாக கொடி கட்டி பறந்து வருகிறார் நடிகை அனுஷ்கா. தமிழில் மாதவன் நடிப்பில் வெளியான ‘ரெண்டு’ படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார்.பிரபலமானார். அதன் பின்னர் ரஜினி, அஜித், விஜய், சூர்யா, விக்ரம் என்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார். சினிமாவில் நுழைந்த ஆரம்பகட்டத்தில் நடிகை அனுஷ்கா கவர்ச்சி நடிகையாக வலம் வந்தார். பின் கதைக்கு ஏற்றவாறு நடிக்க தொடங்கினார்.
அனுஷ்கா அவர்கள் அருந்ததி, பாகுபலி போன்ற படங்களின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

-விளம்பரம்-
Image result for anushka shetty love cricketer

- Advertisement -

கடந்த ஆண்டு சிரஞ்சீவி நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தில் அனுஷ்கா அவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அனுஷ்காவுக்கு தற்போது 38 வயதாகிறது. சில ஆண்டுகளாகவே அனுஷ்காவுக்கும், தெலுங்கு நடிகர் பிரபாஸ்ஸுக்கும் காதல் என்று சமூக வலைத்தளங்களில் பல கிசுகிசுக்கள் வந்தது. இதை இருவரும் மறுத்து விட்டார்கள். பின் அனுஷ்கா ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வந்தது. ஆனால், அந்த மாதிரி எதுவும் நடக்கவில்லை.

இதையும் பாருங்க : ரசிகர்களை கொள்ளையடித்ததா ‘மாஃபியா’ – முழு விமர்சனம் இதோ.

-விளம்பரம்-

தற்போது நடிகை அனுஷ்கா அவர்கள் கிரிக்கெட் வீரர் ஒருவரை காதலிப்பதாக இணையதளங்களில் தகவல் பரவி வருகிறது. அந்த கிரிக்கெட் வீரர் வட இந்தியாவை சேர்ந்தவர் என்றும், தென்னிந்திய அணி ஒன்றுக்காக ரஞ்சி போட்டிகளில் விளையாடி வருகிறார் என்றும் கூறப்பட்டது. இது குறித்து அனுஷ்காவிடம் கேட்ட போது அவர் கூறியது, காதல், திருமணம் என்றாலே என்னைப் பற்றி கிசுகிசுக்கள் தான் சமூக வலைத்தளங்களில் எப்போதும் வரும். இது வழக்கமான ஒன்றாக வைத்து விட்டார்கள். பல தடவை எனக்கு திருமணம் செய்து வைத்தார்கள். பலபேருடன் என்னை இணைத்து பேசி உள்ளார்கள். ஒரு தொழிலதிபரை விரும்புகிறேன், டாக்டரை விரும்புகிறேன் என்றும், என்னுடன் நடித்த நடிகர்களுடன் இணைத்தும் பேசினார்கள்.

Image result for anushka shetty love cricketer

இப்போது கிரிக்கெட் வீரரை காதலிக்கிறேன் என்று கூறுகிறார்கள். எதுவும் உண்மை இல்லை. என்னை ஏன் இப்படி குறி வைக்கிறார்கள் என்று தெரியலை. எனக்கு இது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. நடிகைகள் பற்றி வதந்திகள் வருவது சாதாரணமான ஒன்று தான். எனது திருமண முடிவை நான் என் பெற்றோர்களிடம் விட்டுவிட்டேன். அவர்கள் யாரைப் பார்த்து திருமணம் செய்து கொள்கிறார்களோ அவர் தாலி கட்ட கழுத்தை நீட்டுவேன் என்று தெளிவாக அனுஷ்கா கூறியிருந்தார். இனிமேலாவது அனுஷ்கா குறித்து சமூக வலைதளங்களில் வரும் வதந்திகள் கொஞ்சம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கோனா வெங்கட் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க அனுஷ்கா ஒப்பந்தமாகி இருக்கிறார். அதோடு தமிழில் நடிகர் மாதவனுக்கு ஜோடியாக சைலன்ட் என்ற படத்திலும், நிசப்தம் என்ற படத்திலும் அனுஷ்கா நடித்து வருகிறார்.

Advertisement