2018ல் அதிகம் எதிர்பார்க்கப்படும் முன்னணி நடிகர்களின் படங்கள்

0
1707
2018

1.ரஜினிகாந்த் – 2.0

எந்திரன் முதல் பாகத்தின் தொடர்ச்சி என பலர் கூறி வந்தாலும், இது தொடர்ச்சியான கதை கிடையாது என இயக்குனர் ஷங்கர் கூறியுள்ளார். எந்திரன் படத்தின் சிட்டி ரோபோ இந்த படத்திலும் கதபாத்திரத்திம் கொண்டு அசத்தி இருப்பதால் 2.0 என படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்க ஏமி ஜாக்சன் ஹீரோயினாக நடித்துள்ளார். சமீபத்தில் கூட இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா துபாயில் கோலாகலமாக நடைபெற்றது.

படத்திற்காக ப்ரோமோசன் வேலைகள் அதிகாரப்பூர்வமாக ஆரம்பமாகவில்லை எனினும் கிரிக்கெட் போட்டிகள் நடக்கும் மைதானத்தில் உள்ள பெரிய எல்.சி.டி திரையிலெல்லாம் 2.0 படத்தின் போட்டோக்கள் தான் போடப்படுகிறது. 2018 ஜனவரி மாதம் 25ஆம் தேதி ரிலீஸ் ஆகும் எனத் தெரிகிறது.
rajini 2.0

2.காலா என்ற கரிகாலா – ரஜினிகாந்த்

பா.ரஞ்சித் இயக்கத்தில் மீண்டும் ஒரு ரஜினி படம். இந்த படமும் சில சர்ச்சைகளை கொண்டு வரும் என்பதில் ஐயமில்லை. ஹிமா குரேஷ், அஞ்சலி படீல், சமுத்திர கனி, நான் படேகர், ரமேஷ் திலக் ஆகியோர் நடித்து வரும் இந்த படம் ஒரு போஸ்டரில் அனைவரது எதிர்பார்ப்பையும் கிளப்பிவிட்டுள்ளது. எப்படியும் 2.0க்கு பிறகு வெளியாகிவிடும் என்பதில் ஐய்யமில்லை.

kala

3.விஸ்வரூபம் – 2

திடீரென அரசியலில் ஆர்வம் காட்டி ஆரவாரத்துடன் இருந்த உலகநாயகன் கமல்ஹாசன் சத்தமே இல்லாமல் மீண்டும் தன் பட வேலையை செய்ய துவங்கியுள்ளார். இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. ஜனவரி இறுதியில் 2.0வுடன் வெளியாகும் எனத் தெரிகிறது.

Viswaroopam

4.விஜய்-62

துப்பாக்கி, கத்தி படங்களுக்கு பிறகு இந்த கூட்டணி மீண்டம் இணையவுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஜனவரி மாதம் சூட்டிங் துவங்கி ஆகஸ்ட் மாதம் சூட்டிங் முடிந்துவிடும் என செய்திகள் வந்துள்ளது. இதன் காரணமாக 2018 தீபாவளி ரிலீசுக்கு தயாராகி வருகிறது விஜய்-62.

vijay - murugagoss

5.விஸ்வாசம் – அஜித்குமார்

அஜித் – சிவா கூட்டணியில் நான்காவது முறையாக உருவாகவிருக்கும் இந்த படம் தல தளபதி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த முறை அஜித் சால்ட் அண்ட் பெப்பர் இல்லாமல் இளமை தோற்றத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. அதேபோல் இருக்கும் கெட்டப்பில் தல’யின் போட்டோகள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ட்விட்டர் பேஸ்புக்கில் ட்ரெண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது.

Ajith-kumar

6.சூரியா – செல்வா ராகவன் படம்

இந்த படத்திற்கான தலைப்பு இன்னும் வெளியாகவில்லை. சூரியா36 என குறிப்பிட்டஅந்த படத்திற்காக அறிவிப்பை வெளியிட்டார் இயக்குனர் செல்வராகவன். இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கவுள்ளார். இந்த படமும் 2018 தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது.

Selvaraghavan

7.தானா சேர்ந்த கூட்டம் – சூரியா

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூரியா, கீர்த்தி சுரேஷ், தம்பி ராமையா, பழம்பெரும் காமெடி நடிகர் செந்தில், ஆர்.ஜே பாலாஜி ஆகியோர் நடித்துள்ள படம் இது. சமீபத்தில் படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது. ஒரு சமூக அக்கறை கொண்ட கருத்தை பதிவு செய்யவிருக்கும் படம் இது. வரும் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.

suriya

8.ஜூங்கா – விஜய் சேதுபதி

வெர்ஸ்டைல் மன்னன் விஜய் சேதுபதி நடித்துள்ள இந்த படத்தினை கோகுல் இயக்கியுள்ளார். விஜய் சேதுவின் இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தினை இயக்கியதும் கோகுல் தான். இதன் காரணமாக இந்த படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகர்த்துள்ளது. சமீபத்தில் இந்த படத்திக்காக விஜய் சேதுபதி வித்யாசமான கெட்டப்பில் இருந்த மாதிரி ஒரு படம் வெளியாகி ட்ரெண்ட் ஆனது. 2018 முன் கலாண்டில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

vijay sethubathi

9.துருவ நட்சத்திரம் – விக்ரம்

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் இது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமத்துள்ள இந்த படத்தின் டீஸர் வெளியாக பெரும் வரவேற்பை பெற்றது. படத்தில் விக்ரம் செம்ம க்லாசாக இருப்பார். 2018 ஜனவரியில் வெளியாகும் என முன்னர் அறிவிக்கப்பட்டது. தற்போது படத்திற்கான எந்த இரு அறிவிப்புகள் இல்லையெனினும் எதிர்பார்ப்புகள் எகிறிக்கொண்டே போகிறது.

dhruva1

10.வட சென்னை – தனுஷ்

ஆடுகளம் படத்திற்கு பின்னர் வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணி இணைந்த படம். படத்தின் ஒரு போஸ்டர் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. சூட்டிங் ஆரம்பித்து இடையில் சில காரணங்களால் படம் தள்ளிப் போக தற்போது 2018ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

vada