அவரு அவ்ளோ பெரிய ஸ்டார்னு தெரியாது. ஆனால், ஷூட்டிங் ஸ்பாட்ல – ஏகன் பட அனுபவத்தை பகிர்ந்த நடிகை.

0
1383
piya
- Advertisement -

தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டார், தல போன்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக மாஸ் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகர் அஜித். தமிழ் சினிமா மட்டுமல்ல பாலிவுட் துவங்கி டோலிவுட் வரை அஜித்தை தெரியாத நடிகர் நடிகைகள் யாரும் இருக்க முடியாது. ஆனால், அஜித்துடன் நடித்த பியா பாஜ்பாய்க்கு அஜித்துடன் நடிக்கும் வரை அஜித் யார் என்றே தெரியாது என்று கூறி ஷாக் கொடுத்துள்ளார்.

-விளம்பரம்-

தமிழில் கடந்த 2008 ஆம் ஆண்டு விஜய் இயக்கத்தில் வெளியான ‘பொய் சொல்லப் போறோம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை பியா பாஜ்பாய். அதன் பின்னர் ஜீவா நடிப்பில் வெளியான ‘கோ’ படத்தின் மூலம் ரசிகர்களால் பரிட்சயமானார். கோ படத்தை தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கித்தில் வெளியான கோவா படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடித்தது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுத்தந்தது.

- Advertisement -

மேலும், இவர் ராஜு சுந்தரம் இயக்கத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான ‘ஏகன்’ படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பியா பாஜ்பாய் பேசுகையில், ஏகன் படத்தில் நான் ஒப்பந்தமான போது எனக்கு அந்த படத்தில் நடிப்பது அவ்வளவு பெரிய நட்சத்திரம் என்பது தெரியாது என்னை படப்பிடிப்பிற்காக அழைத்தபோது வெளியில் ரசிகர்கள் கத்திக்கொண்டும் உற்சாகப்படுத்திக் கொண்டும் இருந்தனர். அதன்பின்னர்தான் அவர் எவ்வளவு பெரிய ஸ்டார் என்பதை நான் புரிந்து கொண்டேன். அஜித் சாருக்கு அவரது ரசிகர்களிடம் இருந்து அவ்வளவு அன்பு கிடைத்தது அவர்கள் அஜித்தை கும்பிடுகிறார்கள் என்று கூறியுள்ளார்.

அஜித் குறித்து மேலும் பேசிய நடிகை பியா, அவர் என்னிடம் மிகவும் நன்றாக பழகினார். செட்டிலேயே நான் தான் மிகவும் சின்னப்பெண். அதேபோல நான் அப்போதுதான் அறிமுகமானவர். என்னை அப்படி பாதுகாத்து என்னிடம் அவ்வளவு நன்றாக நடந்து கொண்டார். படப்பிடிப்பில் இருக்கும்போது நாங்கள் ஒன்றாக அமர்ந்து எங்களின் தொழிலைப் பற்றி பேசுவோம். அவரிடம் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன். அதில் ஒருவர் சூப்பர் ஸ்டாராக இருந்தும் எப்படி இவ்வளவு அடக்கமாக இருக்க முடியும் என்பதையும் புரிந்துகொண்டேன் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement