பீசா டெலிவரி பாயால் வந்த வினை. விலை மாது என்று நினைத்து தொடர்ந்து வந்த அழைப்புகள்.

0
8943
gayatrisai
- Advertisement -

தெலுங்கு சினிமா உலகில் மிக பிரபலமான நடிகை காயத்ரி ராவ். இவர் தமிழில் 1990 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த அஞ்சலி படத்தில் நடித்தவர். தற்போது நடிகை காயத்ரி ராவ் அவர்கள் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள சேத்தம்மாள் காலனியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அவர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்து உள்ளார். இவர் அளித்த புகார் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த புகாரில் காயத்ரி ராவ் கூறியிருப்பது, கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி காயத்ரி ராவ் பீட்சா ஆர்டர் செய்திருக்கிறார்.

-விளம்பரம்-

அந்த பீட்சாவை டெலிவரி செய்தவர் டோமினோஸ் ஊழியர் பரமேஸ்வரன். அந்த ஊழியர் கடையிலிருந்து காயத்ரி ராவ் வீட்டுக்கு வரும் வரை அடிக்கடி அவருக்கு போன் செய்து மிகவும் ரூடாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் காயத்ரி ராவ் மிகவும் பயந்து போய் அந்த நபர் வரும் வரை அமைதியாக உள்ளார். பின் பீட்ஸா பையனுக்கு வழி சொன்னார். வீட்டிற்கு வந்து டெலிவரி செய்த போது அந்த நபரிடம் காயத்ரி ராவ்வுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த சமயத்தில் காயத்ரி ராவ் பயத்தில் அந்த டெலிவரி பையனை மொபைலில் படம் பிடித்து வைத்து உள்ளார்.

- Advertisement -

இதையும் பாருங்க : கவின் லாஸ்லியா வச்சி குக்கூ வித் கோமாளிய நடத்தி இருந்தா இப்படி தான் இருந்திருக்கும்-வனிதா பேட்டி.

அந்த நபர் அங்கிருந்து சென்றுவிட்டார். பின் பிட்ஸா டெலிவரி செய்து நாளில் தற்போது வரை புதுப்புது எண்களில் இருந்து காயத்ரி ராவ்வுக்கு அழைப்புகள் வந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் காயத்ரி ராவ் மொபைல் நம்பருக்கு வாட்ஸ் அப்பில் சிலர் ஆபாசமாக மெசேஜ்களையும், புகைப்படங்களையும் அனுப்பி உள்ளனர். அதில் உங்களுடைய எண் பாலியல் தொழிலாளி பெண்ணுடையது தானே என்றும், இணையத்தில் பகிரப்பட்டு உள்ளதை வைத்து தான் தொடர்பு கொண்டதாகவும் ஒருவர் கூறினார். இது கேட்ட காயத்ரி ராவ்வுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

-விளம்பரம்-

பின் தனக்கு போனில் தொடர்பு கொண்ட சக்திவேல், சுந்தரம், மகேஸ்வரன் ஆகிய மூன்று பேருடைய செல்போன் எண்ணை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் அந்த மூன்று பேரையும் அழைத்து விசாரித்ததில் இந்த சம்பவம் வந்து பீட்சா டெலிவரி செய்த பரமேஸ்வரன் தான் காயத்ரி ராவ் செல்போன் எண்ணை வாட்ஸ் அப்பில் உள்ள ஆபாச குழுக்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், வலைத்தளங்களில் ஐட்டம் என்று பதிவிட்டதாகவும் தெரிய வந்து உள்ளது. பீட்சா ஊழியர் பரமேஸ்வரனின் செல்போனை பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement