தற்போது பல இளைஞர்கள் மத்தியில் படு பிரபலமாக பரவி வருவது pubg எனப்படும் players unkown battle ground எனப்படும் கேம் தான். கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பரில் இந்த கேம் அறிமுகமானது. அதன்பின் பப்ஜி விளையாடுவோரை கடக்கமால் ஒரு நாளையும் கழிக்க முடியாத சூழலை பலரும் அனுபவித்திருப்பர். பல சூழல்களில் சிலர் குழுக்களாக ஒன்றுகூடி பப்ஜி விளையாடுவதை பார்த்திருப்போம்.
இந்தியாவில் இந்த கேம் தற்போதைக்கு மொபைல் போன்களில் மட்டுமே தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், மற்ற நாடுகளில் கணினிகளிலும் இந்த கேம் விளையாடபட்டு வருகிறது. சொல்லப்போனால் கணனி pubg யின் லைட் வெர்சன் தான் இந்த மொபைல் pubg.
ஆனால், கணனி வெர்சன் இந்தியாவில் இல்லாதது பல pubg பிரியர்களுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. அதிகளவு பிரபலமானதால் இந்த கேமின் கம்ப்யூட்டர் மற்றும் கேமிங் கன்சோல்களுக்கென வெவ்வேறு வெர்ஷன்கள் வெளியாகி இருக்கின்றன.
இந்த நிலையில் தற்போது பப்ஜி லைட் எனும் வெர்ஷனும் கிடைக்கிறது. பப்ஜி லைட் கம்ப்யூட்டர் வெர்ஷன் அதன் முந்தைய பதிப்பை விட குறைந்த அளவு மெமரி கொண்டிருக்கிறது. கோர் i3 பிராசஸர் மற்றும் 4 ஜி.பி. ரேம் கொண்டிருக்கும் லேப்டாப்களிலும் பப்ஜி லைட் கேமினை சீராக விளையாட முடியும்.
இந்த கேம் விளையாடுவோர் பப்ஜி லைட் பி.சி. எடிஷன் விளையாடுவோருடன் மட்டுமே விளையாட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.