பாகிஸ்தானால் கைது செய்யப்பட்ட இந்திய விமானியிடம் பாகிஸ்தான் இராணுவ மேஜர் கேட்ட கேள்விக்கு நமது வீரர் அளித்த பதில்.
கேள்வி : உங்களுடைய பெயர் என்ன ?
பதில் :wing Commander அபினந்தன்.
கேள்வி : நாங்கள் உங்களை நன்றாக நடத்தி இருக்கிறோம் என்று நம்புகிறோம் என்று பாகிஸ்தான் இராணுவ அதிகாரி சொன்னார்.
பதில் : கண்டிப்பாக நன்றாக கவனித்தீர்கள். ஒரு வேளை நான் இந்தியா திரும்பினாலும் நான் என்னுடைய இந்த பதிலை மாற்ற மாட்டேன்.பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் என்னை அந்த கும்பலிடம் இருந்து மீட்டனர்.அவர்களுக்கும் என்னை பாதுகாப்பாக அழைத்து வந்து உரிய மரியாதை கொடுத்த அனைவருக்கும் நன்றி என்றார்.இதே போன்று தான் எங்களுடைய இந்திய இராணுவமும் உங்களை மரியாதையோடு நடத்தி இருக்கும் என்றார்.
கேள்வி : நீங்கள் இந்தியாவின் எந்த பகுதியில் இருந்து வருகிறீர்கள் என்று கேட்டார்கள்.
பதில் : என்னால் இதற்கு பதில் அளிக்க முடியும்.ஆனால் எந்த இடம் என்று குறிப்பிட்டு நான் சொல்ல மாட்டேன்.தென்னிந்தியாவில் இருந்து வருகிறேன் என்று கூறினார் நமது வீரர்.
கேள்வி : உங்களுக்கு திருமணம் ஆகி விட்டதா ?
பதில் : ஆம் sir ஆகி விட்டது.
கேள்வி : நீங்கள் அருந்தும் டீ நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன் என்றார்.
பதில் : டீ மிகவும் அருமையாக உள்ளது என்றார்.
கேள்வி : நீங்கள் வந்த விமானத்தின் பெயர் என்ன என்றார் ?
பதில் : sorry மேஜர் அதை என்னால் சொல்ல முடியாது.
கேள்வி : உங்களுடைய இலக்கு என்ன ?
பதில் : sorry மேஜர் அதை என்னால் சொல்ல முடியாது.
உயிரே போனாலும் தாய் நாட்டின் ரகசியத்தை சொல்ல மாட்டேன் என்று வீரத்தோடு அங்கு இருக்கும் நீ அல்லவோ இந்தியன்…
That’s an Indian SOLDIER !
— Major Surendra Poonia (@MajorPoonia) February 27, 2019
You will feel proud to Listen Wing Cdr #Abhinandan of Indian Airforce ! He kept safety, honor & welfare of our country first on every reply !
You lived up to ethos of Indian Armed Forces..We r proud of you Bhai?Jai Hind @IAF_MCC @adgpi @indiannavy pic.twitter.com/CJ9HMDrDhZ