ஒரு சூப்பர் சிங்கர் பிரபலம், லிஸ்டில் 2 முன்னாள் போட்டியாளர்களின் கணவர்கள் – சுட சுட பிக் பாஸ் அப்டேட் இதோ.

0
304
biggboss
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி சமீபத்தில் தான் வெற்றிகரமாக முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் ராஜிவ் முதல் இடத்தையும், இரண்டாம் நிகழ்ச்சியில் பிரியங்காவும் பிடித்தார்கள். இதனை தொடர்ந்து தமிழில் புது வித்தியாசமான முயற்சியில் விஜய் டிவி அறிமுகப்படுத்திய பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியும் சமீபத்தில் தான் நிறைவடைந்தது. இந்தியில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ottயில் ஒளிபரப்பானது. இதை தொடர்ந்து இதே கான்சப்டில் தமிழில் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகிவந்தது.

-விளம்பரம்-

மிகவும் பரபரப்பாக சென்ற இந்த சீசனில் முதல் பரிசை பாலாஜி முருதாசும் இரண்டாம் இடத்தை நிரூப்பும் பிடித்து இருந்தார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவைடந்ததால் பிக் பாஸ் ரசிகர்கள் கொஞ்சம் சோகத்தில் ஆழ்ந்தனர். இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் 6 பற்றிய தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. பிக் பாஸ் 6 நிகழ்ச்சி வரும் ஜூலை மாத இறுதியிலோ அல்லது ஆகஸ்ட் முதல் பாதியிலோ துவங்கும் என்றுஎதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால், ஒரு சில காரணங்களால் தள்ளிப்போனது. இப்படி ஒரு நிலையில் பிக் பாஸின் 6வது சீசன் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி துவங்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்து இருக்கிறது. இந்த சீசனில் யார் யார் எல்லாம் கலந்துகொள்ளப்போகிறார்கள் என்று ஆர்வம் தற்போதில் இருந்து ஆரம்பித்துவிட்டது. மேலும், இந்த சீசனை கமல் தொகுத்து வழங்குவாரா அல்லது சிம்புவே தொடர்வாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

biggboss

ஆனால், கமல் தான் இந்த சீசனை தொகுத்து வழங்க இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் இந்த சீஸனின் கலந்துகொள்ளப்போகும் போட்டியாளர்கள் குறித்த லீக்ஸ் தற்போது கசிந்து இருக்கிறது. அதில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் கலந்துகொண்ட செந்தில் கணேஷின் மனைவி ராஜ லட்சுமி கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் நிச்சயம் ஒரு பாடகர் போட்டியாளராக இடம்பெற்று விடுவார்.

-விளம்பரம்-

சீசன் 2வில் ஆனந்த் வைத்தியநாதன், Nsk ரம்யா, சீசன் 3வில் முகேன், சீசன் 4ல் வேல்முருகன், சீசன் 5வில் இசை வாணி, சின்ன பொண்ணு போன்ற பாடகர்கள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இந்த சீசனின் ராஜலக்ஷ்மி கலந்துகொண்டாலும் ஆச்சர்யப்படுவதர்க்கு இல்லை. அதே போல இந்த சீசனில் முன்னாள் போட்டியாளரின் கணவரும் கலந்துகொள்ளப்போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அதன்படி சீசன் 2வில் கலந்துகொண்ட ரம்யாவின் கணவர் சத்யா அல்லது சீசன் 4ல் கலந்துகொண்ட சுசித்ராவின் முன்னாள் கணவர் காரத்திக்குமார் ஆகிய இருவரில் யாராவது கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் கண்டிப்பாக ரம்யாவின் கணவர் சத்யா கலந்துலொள்ள அதிக வாய்ப்பு இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் அவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெரிதாக சீரியல் வாய்ப்புகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement