கழுத்தை அறுத்து விடுவேன் என மிரட்டிய பயில்வான் ரங்கநாதன் – கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்

0
279
bayilvan
- Advertisement -

நடிகர் பயில்வான் ரங்கராஜன் மீது தமிழ் மக்கள் இயக்கத்தின் தலைவர் கே.ராஜன் புகார் அளித்து இருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான காமெடி நடிகராக இருந்தவர் பயில்வான் ரங்கநாதன். இவர் ரஜினி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் உடன் இணைந்து படத்தில் நடித்து இருந்தார். பின் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்தவுடன் தனியாக யூட்யூப் சேனல் உருவாக்கி அதில் சினிமா பிரபலங்கள் பலரை பற்றி அவதூறாக பேசி வருகிறார். அதோடு இவர் நீண்ட காலமாகவே பத்திரிகையாளராக பணியாற்றி வருகிறார். அதனால் சினிமா துறையில் நடக்கும் பல அந்தரங்க விஷயங்களை வெளி உலகிற்கு கொண்டு வந்து இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் எம்ஜிஆர் காலத்தில் இருந்து தமிழ் சினிமாவில் இருந்து வருவதால் சினிமா நட்சத்திரங்களைப் பற்றி அறியாத பல ரகசியங்களை தன்னுடைய பத்திரிக்கையின் மூலம் வெளியிட்டு இருக்கிறார். மேலும், இவர் சினிமா துறையில் உள்ள நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என ஒருவரையும் விட்டு வைக்காமல் அவர்களைப் பற்றி அவதூறாக விட்டு வீடியோக்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து இருக்கிறார். அதனால் இவருக்கும் சினிமா துறையை சேர்ந்த பிரபலங்களுக்கும் இடையயே வாக்குவாதம் இருந்து கொண்டு தான் இருக்கின்றது.

- Advertisement -

பயில்வானும் சர்ச்சை பேச்சுகளும் :

இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல், வரும் எதிர்ப்புகளுக்கும் பதிலடி கொடுத்து தன்னுடைய வேலையை தொடர்ந்து செய்து வருகிறார் பயில்வான். அதுமட்டும் இல்லாமல் இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் சினிமா பிரபலங்களை பற்றி பேச ஆரம்பித்த பின் தான் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார் என்றே சொல்லலாம். அதிலும் சமீப காலமாக இவர் நடிகைகள் குறித்து ஆபாசமாக பேசுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் எப்படி நடிகைகளுக்கு விவாகரத்து ஆனது என்பது குறித்தும், நடிகைகளுக்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது என்பது குறித்தும் பல்வேறு சர்ச்சைகளை பேசி இருக்கிறார்.

நடிகைகள் குறித்து பயில்வான் கூறியது:

இதனால் இவருடைய வீடியோக்களுக்கு பல லட்சம் வியூவர்ஸ் இருக்கிறார்கள். சமீபத்தில் கூட பயில்வான் ரங்கநாதன் மீடு புகார் குறித்த சர்ச்சை எழுந்து இருந்தது. இதனால் பாடகி சின்மயி உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பலரும் பயில்வான் மீது கடுமையாக கண்டனம் தெரிவித்து கருத்துகளை பதிவிட்டு இருக்கின்றனர். அதோடு சில மாதங்களாகவே இவரின் மீது பல பிரபலங்கள் புகார் அளித்து இருந்தார்கள். இந்த நிலையில் நடிகர் பயில்வான் ரங்கநாதன் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தமிழ் மக்கள் இயக்கத்தின் தலைவர் கே ராஜன் புகார் அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது,

-விளம்பரம்-

தமிழ் மக்கள் இயக்கத்தின் தலைவர் அளித்த புகார்:

யூடியூப் சேனல்களில் பெண்களுக்கும் திரைப்பட நடிகர், நடிகைகளுக்கும் எதிராக ரகசியங்களை வெளியிடுகிறேன் என்று சொல்லி பொய்யான செய்திகளை பயில்வான் ரங்கநாதன் ஆபாசமாகவும், தரக்குறைவாகவும் பேசியிருக்கிறார். இதனால் பல பெண்கள் திரைப்பட நடிகர், நடிகைகள் மிகவும் மன வேதனையும், மன உளைச்சலிலும் கஷ்டப்படுகிறார்கள். ஆனால், பயில்வான் அதை கொண்டு கொள்ளாமல் தொடர்ந்து இந்த மாதிரி கேவலமான செயல்களில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில்
யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்து இருந்த பயில்வான் ரங்கநாதன்,

பேட்டியில் ரங்கநாதன் கூறியது:

என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது. என்னை யாராவது தாக்க வந்தால் அரிவாளால் அவர்களின் கழுத்தை அறுத்து விடுவேன். நான் தூத்துக்குடிக்காரன் என எல்லா பெண்களையும் அச்சுறுத்தி இருக்கிறார். அதனால் பாதிக்கப்பட்ட நடிகர், நடிகைகள் அவர் மீது புகார் கொடுக்க பயப்படுகிறார்கள். இதனால் அவரின் பேச்சும் செயலும் வன்முறையை தூண்டி சட்ட ஒழுங்கை பாதிக்க செய்கிறது. ஆகவே பயில்வான் ரங்கநாதன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். இப்படி இவர் அளித்த புகாரின் பேரில் பயில்வான் ரங்கநாதன் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement