பள்ளியில் சீட்டு வாங்கி தருவதாக பணம் வாங்கி மோசடி கேட்டால் அடியாட்களை வைத்து மிரட்டல் –  பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் மதுவந்தி மீது புகார்

0
357
madhuvanthi
- Advertisement -

பிஸ்பிபி பள்ளியில் சீட்டு வாங்கி தருவதாக சொல்லி ஏமாற்றிய பாஜக நிர்வாகி மதுவந்தி மீது புகார் அளித்திருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் ஒய்.ஜி மகேந்திரன். இவரின் மகள் தான் மதுவந்தி. அடிக்கடி இவரை பற்றி எதாவது ஒரு சர்ச்சை சோசியல் பற்றி வந்து கொண்டே தான் இருக்கு. அந்த வகையில் தற்போது இவர் பள்ளியில் சீட்டு வாங்கி தருவதாக சொல்லி மோசடி செய்து இருக்கும் தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் பரவலாகி வருகிறது. சென்னையில் பிரபலமான பள்ளியில் ஒன்று பிஎஸ்பிபி.

-விளம்பரம்-

இதில் சீட் வாங்கித் தருவதாக மதுவந்தி 6 லட்ச ரூபாய் பெற்று மோசடி செய்ததாக தீ நகரை சேர்ந்த கிருஷ்ண பிரசாத் என்பவர் சென்னை காவல் ஆணையரிடத்தில் புகார் அளித்திருக்கிறார். அந்த புகாரில் கூறியிருந்தது, பிஎஸ்பிபி பள்ளியில் சீட்டு பெற்று தருவதாக என்னிடம் வந்து இதுவரை 19 லட்சம் பணம் பெற்றிருக்கிறார். ஆனால், இதுவரை பள்ளியில் சீட் கிடைக்காத மாணவர்களின் பெற்றோர்கள் என்னிடம் பணம் கேட்கிறார்கள் என்று கூறி இருந்தார்.

இதையும் பாருங்க : ஒரு சிலர் கமன்ட் பண்ணா ஒட்டு மொத்த தமிழ்நாட்டையும் திட்டுவீங்களா – நெட்டிசனுக்கு கடுப்பாகி சின்மயி பதில் (காரணம் வைரமுத்து பற்றிய கமன்ட் தான்)

- Advertisement -

கிருஷ்ணபிரசாத் அளித்த புகார்:

இதனையடுத்து கிருஷ்ணபிரசாத்தின் புகார் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் கூறியிருந்தது, கிருஷ்ணபிரசாத் நிர்வகிக்கும் கோவிலுக்கு 2019 முதல் மதுவந்தி வந்து இருக்கிறார். அங்கு கிருஷ்ணாபிரசாத்திடம் பிஎஸ்பிபி பள்ளியை தான் நிர்வகித்து வருவதாகவும், அங்கு சீட் பெற்றுத் தர தலா ரூ.3 லட்சம் தந்தால் சீட் வாங்கித் தருவதாகவும் கூறி இருக்கிறார். இதனையடுத்து மார்ச் 2022ல் கிருஷ்ணாபிரசாத் கோவிலுக்கு வரும் எட்டு பெற்றோர்களிடம் ரூ.19 லட்சம் பணம் வாங்கி மதுவந்தியிடம் கொடுத்து இருக்கிறார்.

மதுவந்தி செய்த மோசடி:

மேலும், நீண்ட நாட்களாக பள்ளியில் சீட் கொடுக்கப்படவில்லை என்பதால் பெற்றோர் கிருஷ்ணபிரசாத் இடம் கேட்டிருக்கின்றனர். ஒரு கட்டத்தில் அவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். மேலும், பல பெற்றோர் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டு அதைப் பற்றி அவரிடம் பேசியதில் 13 லட்சத்தை மட்டும் பிரசாந்துக்கு திருப்பிக் கொடுத்திருக்கிறார் மதுவந்தி. மீதமுள்ள ஆறு லட்சத்தை கிருஷ்ணபிரசாத் கேட்டபோது அவரை தி நகர் பூங்காவிற்கு வரவழைத்து ஆட்களை வைத்து தாக்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

புகாரில் கிருஷ்ணபிரசாத் சொன்னது:

இது பற்றி புகார் கொடுத்த போதும் பாண்டி பஜார் காவல் நிலைய அதிகாரிகள் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தான் தற்போது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது என்று கிருஷ்ண பிரசாத் தரப்பு வழக்கறிஞர் கூறியிருக்கிறார். இதனை அடுத்து தன் மீது அவதூறு பரப்புவதாக கிருஷ்ணபிரசாத் மீது புகார் கொடுக்க உள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவித்து இருக்கிறார். அதில் அவர், கிருஷ்ணபிரசாத் சொல்வதைப் போல நான் பணம் வாங்கவில்லை. எனக்கு பணம் வாங்க வேண்டிய தேவை இல்லை.

மதுவந்தி அளித்த பேட்டி:

அவர் என் பெயரை சொல்லி பணம் வாங்கியிருக்கிறார் அவர் சொல்வதெல்லாம் பொய். பிஎஸ்பிபி எங்கள் பள்ளி. நான் எதற்கு பணம் வாங்க வேண்டும். கிருஷ்ணபிரசாத் என்னுடைய நாடக குழுவில் நடித்துக் கொண்டிருந்தார். அது தவிர எனக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அது மட்டுமில்லாமல் நான்கு மாதங்களுக்கு முன்பு அவரிடம் எந்த பணமும் வாங்கக்கூடாது எச்சரித்தேன். ஆனால், அவர் இந்த முறை நடந்து கொண்டதை பார்க்கும்போது அவர் மீது கண்டிப்பாக புகார் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement