ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்க மீது நடவடிக்கை எடுக்க கோரி – குழந்தைகளுக்கு சேவை செய்யும் பெண் போலீசில் புகார்.

0
1377
Rowdy
- Advertisement -

ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைதாகி சிறைக்கு சென்று வந்த ரவுடி பேபி மற்றும் சிக்கா மீது மீண்டும் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளத்தின் மூலம் பல்வேறு நபர்கள் பிரபலமாகியுள்ளனர். அதில் பெண்கள் சிலர் ஆபாசமாகவும், விதவிதமான வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்கள். அந்த வகையில் டிக் டாக் மூலம் பிரபலமானவர் தான் ரவுடி பேபி சூர்யா. டிக் டாக் தடை செய்யப்பட்ட பிறகு இவர்கள் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ்ஸில் தன்னுடைய கவனத்தை திருப்பினார்கள். அதிலும் திருமணம் ஆகி தோலுக்கு மேல் ஒரு பிள்ளை இருக்கும் நிலையில் இவர் சிக்கா என்பவருடன் அடிக்கும் கூத்து கொஞ்சம் நஞ்சம் இல்லை.

-விளம்பரம்-

ஏற்கனவே இவர் பாலியில் தொழிலில் ஈடுப்பட்டதும், டிக் டாக் இலக்கியாவை பாலியில் தொழிலுக்கு ஈடுபட உதவியதும் அம்பலமானது. இப்படி இருக்க ஆபாசமாக வீடியோக்களை பதிவிட்டு வருவதாக ஜெனிபர் என்பவர் சென்னை சைபர் கிரைம் போலீசில் கமிஷனர் அலுவலகத்திலும், தமிழக டிஜிபி அலுவலகத்திலும் புகார் கொடுத்திருந்தார். இதையடுத்து கோவை சைபர் கிரைம் போலீசார் ரவுடி பேபி சூர்யாவையும், சிக்காவையும் மதுரையில் வைத்து கைது செய்துள்ளனர்.

- Advertisement -

இவர் மட்டுமில்லாமல் இவர் மீது நிறைய பெண்கள் புகார் கொடுத்திருக்கிறார்கள். மேலும், இவர்களுடைய யூடியூப் சேனலை முடக்க கோரியும் புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், இவர்கள் மீது குண்டர் சட்டமும் பதியப்பட்டது. இதனை தொடர்ந்து சில மாதங்கள் சிறையில் இருந் இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் ஜாமினில் வெளியில் வந்தார். சிறை தண்டை அனுபவித்தும் மீண்டும் தனது ஆட்டத்தை ஆரம்பித்து இருக்கிறார் ரவுடி பேபி சூர்யா.

இந்த நிலையில் ரவுடிபேபி சூர்யாவும் அவரது காதலன் சிக்கந்தரும் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண் யூடுயூபர் ஒருவர் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கோவை யூடியூபர் சித்ரா, தாம் யூடியூப் சேனல் நடத்தி வருவதாகவும், அதோடு குழந்தைகளுக்காக சேவை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

-விளம்பரம்-

யூடியூப் மூலம் ரவுடி பேபிசூர்யா, சிக்கந்தர், சாதனா ஆகியோர் போடுகிற வீடியோ குழந்தைகளை மிகவும் பாதிக்கிறது என்று கூறிய அவர், இதனைக் கண்டித்தால் தம்மை அவர்கள் மிரட்டுகின்றனர் என்றும் கூறியுள்ளார். ஏற்கனவே ரவுடி பேபி சூர்யா மீது குண்டர் சட்டம் பதியப்பட்டுள்ளது. இந்த நிலையில் தன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று ரவுடி பேபி சூர்யா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்து இருந்தார்.

அதில் அவர், காழ்புணர்ச்சியோடு அளிக்கப்பட்ட புகாரில் குண்டர் சட்டம் போடப்பட்டிருக்கிறது. எனது கோரிக்கையை அறிவுரை கழகம் உரிய முறையில் பரீசிலிக்கவில்லை என்று கூறியிருந்தார். இதனை அடுத்து இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பெண்களுக்கு எதிராக சுப்புலட்சுமி ஆபாசமாக பேசுகிறார்.

அந்த வீடியோக்களை பார்த்து நீதிபதிகள் முடிவெடுக்க வேண்டும் என கூறி லேப்டாப் மூலம் டிக் டாக் சூர்யா பேசும் காட்சிகள் எல்லாம் நீதிபதிகளிடம் காண்பித்து இருந்தார். சூர்யா பேசியிருக்கும் பேச்சுகளை கேட்டு அதிர்ச்சியடைய நீதிபதிகள் இந்த வழக்கில் எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்க முடியாது விசாரணையை ஆறு மாதத்திற்கு தள்ளி வைக்கிறேன் என்றுகூறிவிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. .

Advertisement