புரட்சியுமில்லை புண்ணாக்குமில்லை..! சர்கார் “ஒரு விரல் புரட்சி” பாடலை மோசமாக விமர்சித்த அரசியல்வாதி

0
962
Sarkar
- Advertisement -

விஜய் நடித்துள்ள “சர்கார்” படத்தில் இருந்து “ஒரு விரல் புரட்சியே” என்ற பாடல் இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியாகி இருந்தது. இந்த பாடலின் இடம் பெற்றுள்ள புரட்சிமிக்க வரிகள் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. ஆளுங்கட்சியில் நடந்து வரும் செயலாற்ற ஆட்சி குறித்தும், மோசமான தலைவர்களால் மக்கள் படும் அவதிகள் குறித்தும் இந்த பாடலில் மிக ஆழமாக குறிப்பிட்டுள்ளனர்.

-விளம்பரம்-

vijay

- Advertisement -

இந்த பாடலுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கிடைத்த போதும் வழக்கம் போல சில அரசியல் பிரமுகர்கள் இந்த பாடலை எதிர்க்க துவங்கி விட்டனர். அந்த வகையில் இந்து முன்னணி கட்சியின் அர்ஜுன் சம்பத், இந்த பாடல் குறித்து கடுமையாக விமர்சித்து ட்வீட் செய்துள்ளார்.

அர்ஜுன் சம்பத்தின் பதிவில்,புரட்சியுமில்லை புண்ணாக்குமில்லை.இப்போதைக்கு புரட்சி, போராட்டங்களை பற்றி படமெடுத்தால் நன்றாக ஓடுமென்று சினிமா seasonal புரட்சியாளர்களுக்கு தெரியும்.சினிமா பாடல்களில் புரட்சியான வரிகளை புகுத்துவதென்பது விவாத எதிர்ப்புகள் மூலம் பிரபலநோக்கு காண வியாபாராயுக்தி அவ்வளவே!என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

ஏற்கனவே விஜய் நடித்த “மெர்சல்” படத்தில் இடம்பெற்ற சில வசனங்களை எதிர்த்து பா ஜ க பிரமுகர்கள் சிலர் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தனர். அது படத்திற்கு ஒரு இலவச விளம்பரம் போல அமைந்திருந்து படம் மேலும் ஹிட் அடைய உறுதுணையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement