கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பொள்ளாச்சியில் நடந்தேறிய கொடூர பாலியல் சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. பொள்ளாச்சியில் இளம் பெண்களை மயக்கி பாலியல் வன்கொடுமை செய்தும், ஆபாசமாக படம் எடுத்தும் அவா்களை மிரட்டி பணம் பறித்து வந்த கும்பல் அண்மையில் பிடிபட்டது.
இந்த வழக்கில் திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், ரிஷ்வந்த் ஆகிய நான்கு போ் கைதுசெய்யப்பட்டனர். இவா்கள் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், இந்த வழக்கில் மற்றுமொரு குற்றவாளியான பார் நாகராஜ் மட்டும் ஜாமினில் வெளியில் வந்தார்.
பார் நாகராஜ் பெண்களை வலுக்கட்டாயமாக உடலுறவில் ஈடுபட வைத்த மூன்று புதிய விடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. இதனால் பார் நாகராஜன் மீதும் பாலியில் குற்றத்தில் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வந்தது. ஆனால், அந்த வீடியோவில் இருப்பது தான் இல்லை என்று பார் நாகராஜன் கூறியிருந்தார்.
மேலும், நாகராஜ் குற்றவாளி என்று தெரிந்தும் அரசியல் செல்வாக்கு காரணமாக அவர், கைது செய்யப்படாமல் இருப்பதை பலரும் கண்டித்து வருகின்றனர். இந்த நிலையில் ஜாமினில் வெளிவந்த நாகராஜ், போலீசுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கேக் வெட்டி கொண்டாடினர். இந்நிலையில் தற்போது நாய் தகராறில் ஈடுபட்டதாக பார் நாகராஜ் மற்றும் அவரது நண்பர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதையும் பாருங்க : இது என்ன லோ பட்ஜெட் கீர்த்தி சுரேஷா.! வைரலாகும் டிக் டாக் வீடியோ.!
சமீபத்தில் கோவை சிந்தராபுரத்தை சேர்ந்த ஜிபின் என்பவருக்கும், பொள்ளாச்சி ஊத்துக்காடு சாலையைச் சேர்ந்த சபரீஷ் என்பவருக்கும், இடையே பக் ரக நாய் விற்பனையில் தகராறு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் சபரீசுக்கு ஆதரவாக பார் நாகராஜ் அருண் கார்த்திக், மாரிமுத்து உள்ளிட்டோர் வக்காலத்து வாங்க சென்றுள்ளனர்.
மேலும், ஜிபினுக்கு ஆதரவாக அனுப், சந்தோஷ் விக்ரம், நவ்சாத், ராகவேந்திரா, கனகராஜ் ஆகியோரும் நேற்று முன்தினம் மோதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இருவரும் போலீசில் பரஸ்பரம் புகார் அளித்தனர்.இதனையடுத்து பார் நாகராஜ் உள்ளிட்ட 14 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். தற்போது இரு தரப்பினரையும் போலிசார் விசாரித்து வருகின்றனர்.