பெண்களை பாலியல் சித்தரவதை செய்த வீடியோவில் இருப்பது இவரது வீடு தான்.! விசாரணையில் அம்பலம்.!

0
472

பொள்ளாச்சியில் இளம் பெண்களை மயக்கி பாலியல் வன்கொடுமை செய்தும், ஆபாசமாக படம் எடுத்தும் அவா்களை மிரட்டி பணம் பறித்து வந்த கும்பல் அண்மையில் பிடிபட்டது. இந்த வழக்கில் திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், ரிஷ்வந்த் ஆகிய நான்கு போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்கள் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவே இயக்கியுள்ள இந்த சம்பவம் குறித்து பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர் இந்த வழக்கில் முதல் முதலில் பெண் ஒருவர் கதறும் வீடியோ ஒன்று வெளியாகி இருந்தது அந்த வீடியோவில் அந்த பெண்ணின் அழுகுரல் கேட்டு நெஞ்சில் அந்த வீடியோவை கேட்டு நெஞ்சம் பதறியது.

இதையும் படியுங்க : தந்திரமாக முகநூலில் பெண் டாக்டரை திருநாவுக்கரசு வலையில் சிக்க வைத்தது இப்படித்தான்.! வெளியான ஷாக்கிங் ரிப்போர்ட்.! 

இந்த சம்பத்தை கண்டித்து பொள்ளாச்சியில் இருக்கும் மாணவ மாணவிகள் போராட்டத்தையும் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வீடு திருநாவுக்கரசு வீட்டில் தான் நடைபெற்றது என்று போலீசார் உறுதி செய்துள்ளனர். தற்போது இதற்கான ஆதாரமும் வெளியாகியுள்ளது.