பொன் மாணிக்கவேல் எப்படி இருக்கிறது – முழு விமர்சனம் இதோ.

0
1281
ponmanikkavel
- Advertisement -

இயக்குனர் முகில் செல்லப்பன் இயக்கத்தில் இன்று வெளியாகி உள்ள படம் பொன் மாணிக்கவேல். இந்த படத்தில் பிரபுதேவா, நிவேதா பெத்துராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளார்கள். இந்த படம் இன்று ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை நேமிசந்த் ஜபக் தயாரித்து இருக்கிறார். இந்த படத்திற்கு இமான் இசையமைத்திருக்கிறார். மேலும்,பிரபுதேவாவின் பொன்மாணிக்கவேல் படம் மக்கள் மத்தியில் வரவேற்ப்பை பெற்றதா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

- Advertisement -

தமிழ் சினிமாவில் எவ்வளவோ நேர்மையான காவல் அதிகாரிகளின் கதைகளைப் பார்த்திருக்கிறோம். அந்த வகையில் கடமை தவறாத நேர்மையான அதிகாரியின் கதையாக பொன்மாணிக்கவேல் படம் உள்ளது. 90 காலகட்டத்தில் வர வேண்டிய படத்தை 2021ல் படமாக இயக்கி வெளியிட்டு இருக்கிறார் இயக்குனர். படத்தின் ஆரம்பத்தில் நீதிபதி ஒருவரின் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்படுகிறார். அந்த கொலையாளியை கண்டுபிடிக்க முடியவில்லை. பின் காவல்துறை அணி இதற்கான முயற்சியில் ஈடுபடுகிறது.

மேலும், இந்த வழக்கை விசாரிக்க பொன்மாணிக்கவேல் தான் பொருத்தமான அதிகாரி என்று மேலதிகாரிகள் எல்லாம் சேர்ந்து பிரபுதேவாவை நியமிக்கிறார்கள். ஆனால், பிரபுதேவா தன்னுடைய வேலையை ராஜினாமா செய்துவிட்டு விவசாயம் செய்து கொண்டிருக்கிறார். பின் அவரிடம் இருக்கிற நிலைமையை எடுத்துச் சொல்லி புரிய வைத்து சென்னைக்கு அழைத்து வருகிறார்கள். பிரபு தேவாவும் இந்த வழக்கை விசாரிக்க கிளம்புகிறார். நீதிபதியை கொன்றது யார்? இதற்கு பின்னணி என்ன? என்ன காரணம்? என்பதே படத்தின் மீதிக்கதை.

-விளம்பரம்-

வழக்கம் போல் படத்தில் வில்லன், இன்ஸ்பெக்டர், வில்லனுக்கு இன்னொரு வில்லன் என்று கதைக்களத்தை வழக்கமான பாணியில் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர். படத்தில் வில்லனாக சுரேஷ் மேனன் நடித்திருக்கிறார். இவர் கை அசைத்தாலே போதும் ஒட்டுமொத்த அரசியலும், சட்டமும் இவருக்கு முன்னாடி என்று பயப்படும் அளவிற்கு இவருடைய கதாபாத்திரம் உள்ளது. மேலும், படத்தில் ஒரே ஒரு டூயட் பாடல் தான் உள்ளது. அதிலும் வழக்கம் போல் இமான் கண்ணே, தங்கமே, செல்லமே என்ற பாடல்களை வாசித்திருக்கிறார்.

படத்தின் ஆரம்பத்தில் என்ன கதை? என்னவென்று புரியாமல் குழப்பத்தில் கொண்டு சென்று இருக்கிறார் இயக்குனர். அதோடு 90 காலகட்டத்தில் வந்த கதையை அப்படியே கொஞ்சம் கூட மசாலா தடவாமல் இயக்கியிருக்கிறார். மிகத் திறமையான, பிரபலமான நடிகர் பிரபு தேவா இந்த மாதிரி கதையில் நடித்து இருக்க வேண்டாம் என்று ரசிகர்கள் சொல்லும் அளவிற்கு படம் அமைந்திருக்கிறது. வழக்கமான கொலை வழக்கு, காவல்துறை நடவடிக்கை என்று எந்த ஒரு புது மாற்றமும் இல்லாமல் 80, 90 காலகட்டத்தில் வந்த படங்களையே அப்படியே மீண்டும் 2021ல் இயக்கி வெளியிட்டிருக்கிறார்கள்.

பிளஸ்:

போலீஸ் கதாபாத்திரம், சட்ட ஒழுங்கை சரியான முறையில் காண்பித்திருக்கிறார்கள்.

நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள். மற்றபடி சொல்லிக்கொள்ளும் அளவிற்கு படத்தில் ஒன்றுமில்லை.

மைனஸ்:

அரைத்த மாவையே மீண்டும் மீண்டும் அரைப்பது போல 90 காலகட்டத்தில் வந்த படத்தையே கொஞ்சம் கூட மாற்றம் இல்லாமல் இயக்கி இருக்கிறார் இயக்குனர்.

பின்னணி இசையிலும் எந்த ஒரு மாற்றமும் இல்லை.

படத்தில் பல நடிகர்கள் செட் பிராப்பர்ட்டி போல் இருக்கிறார்களே தவிர எந்த ஒரு மாற்றமும், ஆக்ஷனும் இல்லை.

பொன் மாணிக்கவேல் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றம் என்று சொல்லலாம்.

மொத்தத்தில் பொன் மாணிக்கவேல் – பொன்னும் இல்லை மாணிக்கமும் இல்லை,வெறும் பித்தளை தான்.

Advertisement