கடை கடையாக சென்று மடிப்பிச்சை வாங்கிய பார்த்திபன் – என்ன காரணத்திற்காக தெரியுமா?

0
212
parthiban
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் பார்த்திபன். இவர் முதலில் இயக்குனர் பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். அதன் பின் தான் இயக்குனராக அவதாரம் எடுத்தார். மேலும், தமிழ் சினிமா உலகில் வித்தியாசமான முறையில் படங்களை கொடுப்பதில் கைதேர்ந்தவர் நடிகர் பார்த்திபன்.இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-
parthiban

அந்த வகையில் சமீபத்தில் பார்த்திபன் இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் இரவின் நிழல். இந்த படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு இருந்தது. இதில் பார்த்திபன், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருக்கின்றனர். இந்த படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசை அமைத்து இருக்கிறார். மேலும், இந்த படத்தை இயக்குவது மட்டுமில்லாமல் பார்த்திபன் நடித்தும் இருக்கிறார்.

- Advertisement -

பார்த்திபன் திரைப்பயணம்:

அகிரா புரோடக்சன் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. மேலும், பிரபலங்கள் பலரும் பார்த்திபனின் முயற்சியை பாராட்டி இருந்தார்கள். இதனை அடுத்து பார்த்திபன் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் பொன்னியின் செல்வன். பல பேரின் கனவான 70 ஆண்டு வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் கதையை தற்போது இயக்குநர் மணிரத்னம் இயக்கி சாதித்து காட்டி இருக்கிறார்.

பொன்னியின் செல்வன் படம் :

இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் மாதம் இறுதியில் வெளியாகி இருக்கிறது. பொன்னியின் செல்வன் படத்தில் சின்ன பழுவேட்டரையர் என்ற கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடித்திருக்கிறார். இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. இதனை அடுத்து பார்த்திபன் அவர்கள் படம் இயக்குவதிலும், நடிப்பதிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

-விளம்பரம்-

சென்னை சர்வதேச புத்தக விழா :

இந்த நிலையில் தான் புத்தக விழாவில் நடிகர் பார்த்திபன் செய்த செயல் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது. கடந்த 6ஆம் தேதி சென்னையில் சர்வதேச புத்தக கண்காட்சி விழா தொடங்கியது. இந்த விழாவை தமிழ் நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் திரையிடப்பட்டு வருகிறது. முன்னதாக 16,17,18ஆம் தேதிகளில் சர்வதேச புத்தக கண்காட்சியும் நடைபெற்றது. இதில் வெளிநாட்டு எழுத்தாளர்களின் புத்தகங்கள் திரையிடப்பட்டன.

மடிப்பிச்சை கேட்ட பார்த்திபன் :

அந்த வகையில் இன்று இந்த புத்தக விழாவை பார்வையிட நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் கலந்து கொண்டார். அப்போது அங்கிருந்த ஒவ்வொரு புத்தக அரங்கத்தில் பார்த்தவன் மடிப்பிச்சை கேட்டு புத்தகங்களை பெற்று அவற்றை சிறை வாசிகள் வாசிக்க கொடுத்தார் இந்த சம்பவம் வைரலானதை அடுத்து நடிகர் பார்த்திபனை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Advertisement