பல்வேறு தடைகளுக்கு பின்னர் OTT -யில் வெளியான ‘பொன்மகள் வந்தாள்’ – முழு விமர்சனம்.

0
1187
ponmagal

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகை ஜோதிகா. தற்போது நடிகை ஜோதிகா நடிப்பில் பொன்மகள் வந்தாள் படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் முதல் பார்வை இப்போது பார்க்கலாம். ஒரு பெண்ணின் மரணத்தில் இருக்கும் மர்மத்தைக் கண்டுபிடித்து நீதிக்காகப் போராடும் இன்னொரு பெண்ணின் கதையே ‘பொன்மகள் வந்தாள்’. ஊட்டியில் உள்ள 10 வயதுக் குழந்தையை ஜோதி என்கிற ஒரு பெண் துப்பாக்கி முனையில் கடத்தி விட்டதாகவும், அந்த குழந்தையை காப்பாற்றப் போன இரு இளைஞர்களையும் அவர் சுட்டுக்கொன்றதாகவும், அந்த சைக்கோ குற்றவாளியைத் தேடி வருவதாகவும் போலீஸார் கூறுகின்றனர்.

பிறகு திருப்பூரில் இருந்து ஜெய்ப்பூர் தப்பித்துச் செல்ல இருந்த சைக்கோ ஜோதியைப் பிடித்து விடுகின்றனர். அந்த குழந்தையை மறைத்து வைத்திருத்துக்கும் இடத்தைக் காட்டச் சொல்லும் போது அந்த பெண் குற்றவாளி எங்களைச் சுட்டதால் நாங்களும் பதிலுக்குச் சுட்டோம். அதில் அவர் இறந்துபோனார். இது 2004-ம் ஆண்டில் நடக்கிறது.15 ஆண்டுகளுக்குப் பிறகு உண்மையை அறிந்துகொள்ளும் நோக்கில் இந்த வழக்கைக் கையில் எடுக்கிறார் வழக்கறிஞர் வெண்பா (ஜோதிகா). அப்பா பெட்டிஷன் பெத்துராஜ் (பாக்யராஜ்) ஊக்கமும் ஆக்கமும் கொடுத்து அவருக்கு உதவுகிறார்.

- Advertisement -

மேலும், வழக்கறிஞராக ஜோதிகா வாதாடும் முதல் வழக்கு இது தான். குழந்தைகளைக் கடத்திக் கொன்ற ஒரு கொலைகாரிக்கு சாதகமாக பேசுவதா என்று பொதுமக்கள் கொந்தளித்து ஜோதிகாவை அவமானப்படுத்துகின்றனர். பல அவமானங்களைத் தாண்டி ஏன் இந்த வழக்கைக் கையில் எடுக்கிறார், அந்த பெண் யார்? எதற்காக அந்த பெண் கொலை செய்தார் என்று பல திருப்பங்களுடன் அமைந்தது. பின் இந்த வழக்கின் பின் உள்ள உண்மைகளை ஜோதிகா எப்படி வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிறார் என்பதே ‘பொன்மகள் வந்தாள்’ படத்தின் திரைக்கதை.

இந்த படத்தில் வலி, வேதனை, துயரம், ஆற்றாமை, அழுகை, பதற்றம், உறுதி, துணிச்சல், எதிர்ப்பு, அன்பு என அத்தனை உணர்வுகளையும் ஜோதிகா அப்படியே திரையில் கொண்டு வந்து அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். படத்தில் பிற நடிகர்களும் தங்களுடைய கதாபாத்திரங்களை கனகசித்தமாக நடித்து உள்ளார்கள். வடநாட்டுப் பெண், வடநாட்டு இளைஞர் என்றாலே தீயவர், கடத்தல்காரர், கொலைகாரர் என்ற பார்வையுடன் அணுக வேண்டாம். ஒரு வீட்டில் பெண் குழந்தை எப்படி நடந்துகொள்ள வேண்டும், உடை உடுத்த வேண்டும், யாருடன் பேச வேண்டும் என்று சொல்லிக்கொடுக்கும் பெற்றோர்கள் அதே வீட்டில் உள்ள பசங்களுக்கு பெண்களை எப்படிப் பார்க்க வேண்டும், எப்படி மதிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுக்க வேண்டும் என பல கருத்துக்களை இந்த படம் மூலம் அறிவுறுத்தபடுகிறது. தலைப்புக்கு ஏற்றவாறு நிஜமாகவே ஜோதிகா பொன்மகள் தான்.

-விளம்பரம்-
Advertisement