இவர் என் மகள் இல்லை என்று பொன்னம்பலம் அளித்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக இருந்தவர் பொன்னம்பலம். இவர் தமிழ் சினிமாவில் ஒரு சண்டை கலைஞராக தான் அறிமுகமானார். அதன் பின் இவர் ஒரு சில காட்சிகளில் நடித்தார். பிறகு தமிழ் சினிமாவில் மிக சிறந்த வில்லன் நடிகர் என்று பெயர் எடுத்தார்.
பின்னர் இயக்குனர் ,ஹீரோ, நகைசுவை என்று பல அவதாரம் எடுத்து வெற்றி கண்டவர் பொன்னம்பலம். மேலும், தமிழில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற பல்வேறு நடிகர்களின் படத்திலும் பொன்னம்பலம் நடித்து இருக்கிறார். அதோடு இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு ,கன்னடம், மலையாளம் என்று பல்வேறு மொழிகளிலும் வில்லன் ரோலில் நடித்து இருக்கிறார்.
மேலும், இவர் இடியுடன் மழை என்ற படத்தில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். பின் 2011 ஆம் ஆண்டு பொன்னம்பலம் அவர்கள் அரசியலில் ஈடுபட்டிருந்தார். சில ஆண்டுகளுக்கு பிறகு இவர் அரசியலில் இருந்தும் விலகிவிட்டார். பின் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பொன்னம்பலம் கலந்து கொண்டு இருந்தார். இதன் மூலமாவது இவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்குமா? என்று எதிர்பார்த்தார். ஆனால், கிடைக்கவில்லை.
இப்படி ஒரு நிலையில் நடிகர் பொன்னம்பலம் அவர்கள் சிறுநீரக கோளாறு காரணமாக அடையாறில் உள்ள VHS மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரது சிகிச்சைக்கு பல நடிகர்கள் உதவி செய்து இருந்தார்கள். அதோடு இவருக்கு அவரது அக்கா மகனே ஒரு சிறுநீரகத்தை கொடுத்து தற்போது பொன்னம்பலம் நல்லபடியாக இருந்து வருகிறார். மேலும், தனக்கு உதவி செய்த நடிகர்களுக்கு பொன்னம்பலம் நன்றி தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் பொன்னம்பலத்தின் மகளுடைய புகைப்படம் தான் தற்போது இணையத்தில் சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, நடிகர் பொன்னம்பலத்திற்கு கார்த்திக், கிருத்திகா என்ற இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். இந்த நிலையில் சரண்யா பொன்னம்பலம் என்ற பெயரில் இருந்த ஒரு பெண்ணின் புகைப்படத்தை பார்த்து பலருமே இவர் தான் பொன்னம்பலத்தின் மகள் என்று பதிவிட்டிருந்தார்கள்.
பின் இது குறித்து நடிகர் பொன்னம்பலம் அவர்கள் என்னுடைய மகளின் பெயர் கிருத்திகா. இணையத்தில் பரவி வரும் சரண்யா பொன்னம்பலம் என்னுடைய மகள் கிடையாது. இது பொய்யான செய்தி. குடும்பத்திற்குள் குழப்பத்தை ஏற்படுத்தாதீர்கள் என்று பொன்னம்பலம் கேட்டுக் கொண்ட தகவல் தற்போது தான் வைரலாகி வருகிறது.