கடந்த 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் பிரபல நடிகரான பொன்னம்பலம் சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் இருந்து பின்னர் அதிலிருந்து மீண்டு வந்தார். இந்நிலையில் சிறுநீரக செயலிழப்பு எப்படி நடந்தது என்பதை பற்றி அதிர்ச்சியூட்டும் விஷியத்தை சமீபத்தில் உடகாத்திற்கு கொடுத்த பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். அந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பொன்னம்பலம் தமிழ் சினிமாவில் ஒரு சண்டை கலைஞராக வந்தவர் பின்னர் இவர் சண்டை பயிற்சியாளர் பின்னர் ஒரு இரு காட்சிகளில் நடிக்கவந்தார்.
பிறகு தமிழ் சினிமாவில் மிக சிறந்த வில்லன் நடிகர் என்று பெயர் எடுத்தவர். பின்னர் இயக்குனர் ஹீரோ நகைசுவை என்று பல அவதாரம் எடுத்து வெற்றி கண்டவர். தமிழில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய் அஜித் போன்ற பல்வேறு நடிகர்களின் படத்திலும் நடித்துள்ளார்.தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு ,கன்னடம் ,மலையாளம் என்று பல்வேறு மொழிகளில் வில்லன் நடிகராக நடித்து வந்தவர் நடிகர் பொன்னம்பலம் .
சிறுநீரகம் செயலிழப்பு ;
இந்த நிலையில் நடிகர் பொன்னம்பலம் சிறுநீரக கோளாறு இந்த நிலையில் நடிகர் பொன்னம்பலம் சிறுநீரக கோளாறு காரணமாக அடையாறில் உள்ள VHS மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரது சிகிச்சைக்கு திரு கமல்ஹாசன் உதவிசெய்து இருந்தார். மேலும், பொன்னம்பலம் அவர்களிடம் தினமும் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்து வந்தார். அதோடு இவருக்கு அவரது அக்கா மகனே ஒரு சிறுநீரகத்தை கொடுத்து தற்போது நல்லபடியாக இருந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றிக்கு பேட்டி கொடுத்த அவர் சில அதிர்ச்சியூட்டும் விஷியங்களை கூறினார்.
ரஜினி கொடுத்த 50ஆயிரம் ரூபாய் :
அந்த பேட்டியில் பொன்னம்பலம் கூறுகையில் “எனக்கு உடல்நிலை சரியில்லாத போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் உதவி கேட்டேன் அவர் தொடக்கத்தில் 50ஆயிரம் ரூபாய் கொடுத்தார். ஆனால் அது என்னுடைய கைக்கு வரவில்லை மருத்துவமனை கட்டணம் போன்றவற்றிக்கு சென்று விட்டது. இதனால் பொருளாதார ரீதியாக சிரமத்தில் இருந்த நான் மீண்டும் ரஜினிகாந்திடம் பணஉதவி கேட்டேன்.
ரஜினிகாந்த் மனைவி செய்த செயல் :
நான் ரஜினிகாந்திடம் இருந்து பெரிய தொகையை எதிர்பார்த்தேன். ஆனால் அவர் 50ஆயிரம் ரூபாய் தான் கொடுத்தார். அதற்கு பிறகு அவருடைய மனைவி கவலைப்பட வேண்டாம் என்றும், மருத்துவ சிகிச்சை செலவு முழுவதையும் தான் பார்த்துக்கொள்வதாக நம்பிக்கை அளித்தார். ஆனால் என்னை சேர்க்க அரசு மருத்துவமனையை தேடிக்கொண்டிருந்தார்கள். அரசு மருத்துவமனையை நான் குறை சொல்லவில்லை. இருந்தாலும் அங்கே மருந்துகள் வாங்க வரிசையில் நிற்க வேண்டும் சிகிச்சை முடிவதற்க்கே மூன்று ஆண்டுகள் ஆகும் என்று தெரிவித்தார் பொன்னம்பலம்.
#Rajinikanth கிட்ட உதவி கேட்டேன். பெரிய amount தருவார்னு நினைச்சேன். ஆனா 50000 ரூ தான் கொடுத்தார். அவர் wife லதா கவலைப் படாதீங்க கிட்னி transplant operation எல்லா செலவையும் பாத்துக்குறோம்னு சொல்லிட்டு போனாங்க. ஆனா GH ல ட்ரை பண்ணிட்டு இருந்தாங்க. – பொன்னம்பலம்.#Shameonyou_Rajini pic.twitter.com/BPtJGgRmY1
— 🔦🍃🍁 ☈ꍏ♪€ⓢ♄ 🍁🍃🔦 🅼🅽🅼 (@kaadhale_aadhal) March 22, 2023
ஏமாற்றிய விஜய், அஜித் :
நடிகர் பொன்னம்பலம் இதற்கு முன்னர் கூட நடிகர் அஜித்தை தன்னுடை தம்பி போல நினைத்தேன் ஆனால் அவர் ஒரு போன் கூட பண்ணவில்லை என்றும். விஜய் நான் எப்படி இருக்கிறேன் என்று தெரிந்தும் கூட விசாரிக்கவில்லை என்று கூறினார். மேலும் தனக்கு தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி போன் போட்டதும் 40 லட்சம் கொடுத்தார் எனவும் பல தெலுங்கு நடிகர்கள் ஏனக்கு உதவி செய்தனர் என்றும் ஒரு நேர்காணலில் பொன்னம்பலம் கூறியது குறிப்பிடதக்கது.