கேப்டன் முதல், கர்ணன் வரை பல படங்களில் நடித்துள்ள வந்தியத்தேவனின் குதிரை – இன்று உயிருடன் இல்லாத சோகம்.

0
271
karnan
- Advertisement -

பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியதேவன் பயன்படுத்திய குதிரை இறந்ததற்கான காரணம் குறித்து குதிரை வளர்க்கும் தமிழரசன் அளித்திருக்கும் பேட்டி சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர் மணிரத்னம். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவின் 70 ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக இயக்குநர் மணிரத்னம் இயக்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த கதையை பல பேர் முயற்சி செய்து இருந்தார்கள். ஆனால், அதை மணிரத்னம் தான் சாதித்து காட்டி இருக்கிறார். பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக உருவாகி இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் மணிரத்னத்தின் திரை வாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரம்மாண்டமாக இந்த திரைப்படம் தயாராகி இருக்கிறது. இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், இந்த கார்த்தி, ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரகுமான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் என சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள்.

- Advertisement -

பொன்னியின் செல்வன் படம்:

இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தில் ரவிவர்மன் ஒளிப்பதிவாளராகவும், தோட்டாதரணி கலை இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார்கள். அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த பொன்னியின் செல்வன் படம் சமீபத்தில் தான் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது. தமிழ் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் உலக சினிமா ரசிகர்களும் பொன்னியின் செல்வன் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

படத்தில் குதிரை:

அதோடு இந்த படம் இதுவரை உலக அளவில் 400 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, இந்த படத்தில் நடிகர்களுடன் அதிகமாக வலம் வந்தது குதிரை தான். படம் ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை நடிகர்கள் குதிரைகளுடன் பயணித்த காட்சிகள் தான் அதிகமாக இருந்தது. இந்த குதிரைகளை ட்ரெயின் செய்தவர் தமிழரசன். இந்நிலையில் தமிழரசன் அவர்கள் பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவர் கூறியிருந்தது, மூன்று தலைமுறைகளாக குதிரை ட்ரெய்னிங் செய்கிறோம்.

-விளம்பரம்-

தமிழரசன் அளித்த பேட்டி:

நான் மணிரத்தினம் சார் உடன் முதல் படத்திலிருந்து பயணித்துக் கொண்டிருக்கிறேன். பொன்னியின் செல்வன் போன்ற வரலாற்று காவியத்தில் பணியாற்றியது நினைத்து எனக்கு பெருமையாக இருக்கிறது. இந்த படத்தில் அதிகமாக வந்திய தேவன் கதாபாத்திரத்திற்கு தான் குதிரை கொடுக்கப்பட்டிருக்கும். அதனால் கார்த்திக்கு அவர்கள் காலையில் வரும்போது குதிரைக்கு பிஸ்கட்,கேரட் எல்லாம் வாங்கி கொண்டு வருவார். இந்த படத்தில் கார்த்திக் அவர்கள் அலெக்ஸ் என்ற குதிரை பயன்படுத்தியிருந்தார். அலெக்ஸ் குதிரை இதற்கு முன்பு கேப்டன் பிரபாகரன் படத்தில் விஜயகாந்த், மன்சூர் அலிகானுக்கு பயன்படுத்தியிருந்தார்கள்.

குதிரை இறப்பு :

கருப்பு நிலா, கருப்பு ரோஜா, தனுஷ் நடிப்பில் வந்த கர்ணன் போன்ற பல படங்களில் அலெக்ஸ் நடித்திருக்கிறார். மூன்று வயதில் அதை நாங்கள் வாங்கி வளர்த்தோம். பொன்னியின் செல்வன் படத்தில் கார்த்திக்கு மட்டும் இல்லாமல் பிற நடிகர்களுடனும் நடித்திருந்தார். ஒரு குதிரை 27 லிருந்து 30 வயது தான் அதனுடைய ஆயுட்காலம். அலெக்ஸ்க்கு 30 வயது. சமீபத்தில் தான் ஒரு பட சூட்டிங் முடிந்த அடுத்த நாள் இறந்து விட்டது. வருத்தமாக இருந்தது. பிள்ளையாக 27 வருடமாக இருந்தது. திடீரென்று அது உடம்பு சரியில்லாமல் இறந்ததால் எங்களால் காப்பாற்ற முடியவில்லை என்று பல சுவாரசியமான விஷயங்களை கூறி இருக்கிறார்.

Advertisement