பொன்னியின் செல்வன் படம் உருவாகுவதற்கு பாகுபலி காரணமா ? மணிரத்னம் விளக்கம்.

0
553
ponniyin
- Advertisement -

பொன்னியின் செல்வன் படம் உருவாக பாகுபலி படம் தான் முக்கிய காரணம் என்று இயக்குனர் மணிரத்தினம் கூறியிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர் மணிரத்தினம். இவர் வித்யாசமான கதைகளை இயக்கி உலகிற்கு கொடுப்பதில் கைத்தேர்ந்தவர். தமிழ் திரையுலகில் ஒரு இயக்குநருக்கு இவ்வளவு பெரிய பட்டாளமா! என்று ஆச்சர்யப்படும் அளவிற்கு இயக்குநர் மணிரத்னமிற்கு ரசிகர்கள் உள்ளனர்.

-விளம்பரம்-
Bahubali-2

மேலும், மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படம் ‘பொன்னியின் செல்வன்’.` பல ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் கதை தற்போது திரைப்படமாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் மணிரத்னம். இதை படமாக்கப் பல பேர் முயற்சி செய்து இருந்தார்கள். ஆனால், அதை மணிரத்னம் சாதித்து காட்டி இருக்கிறார்.

- Advertisement -

பொன்னியின் செல்வன் படம்:

பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக திரைக்கு வர இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் மணிரத்னத்தின் திரைவாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரம்மாண்டமாக இந்த திரைப்படம் தயாராகி இருக்கிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். மேலும், இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என சினிமா உலகில் உள்ள முன்னணி நடிகர்களான பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள்.

ponniyin

படத்தின் டீசர் :

இந்த படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியிடவிருக்கிறார்கள். இந்த படத்தில் ரவிவர்மன் ஒளிப்பதிவாளராகவும், தோட்டாதரணி கலை இயக்குனராகவும், சைடில் டெக்னிகல் ஆகவும் கலை இருக்கிறார்கள். தற்போது படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து விட்டது. இந்த படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அனைவரும் எதிர்பார்த்திருந்த பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது. தற்போது இந்த படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

-விளம்பரம்-

பொன்னியின் செல்வன் படத்தின் பாடல் வெளியீடு:

சமீபத்தில் தான் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாடல் வெளியாகி இருந்தது. இந்த படத்தின் இரண்டாவது பாடல் சோழா சோழா வெளியிடப்பட்டிருக்கிறது. இந்நிலையில் ஹைதராபாத்தில் பொன்னியின் செல்வன் பாடல் வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடத்தப்பட்டிருந்தது. இதில் இயக்குனர் மணிரத்தினம், நடிகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தார்கள். மேலும், விழாவில் பேசிய மணிரத்னம் அவர்கள் கூறியிருந்தது, வரலாற்று படங்களை மிக சிறப்பாக எடுக்க முடியும் என்பதை பாகுபலி படத்தின் மூலம் இயக்குனர் ராஜமௌலி நிரூபித்துக் காட்டி இருந்தார்.

maniratnam

மணிரத்தினம் சொன்னது:

மேலும், பாகுபலி படமும் பிரமாண்ட வெற்றியை பெற்று இருந்தது. இது எங்களுக்கு வரலாற்று படத்தை சிறப்பாக எடுக்க முடியும் என்ற நம்பிக்கையையும், ஒரு ஐடியாவையும் கொடுத்திருக்கிறது. இதற்காக ராஜமௌலிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதே போல் இந்த படத்தை தெலுங்கில் வெளியிட தில் ராஜுவுக்கும் நன்றி என்று கூறி இருக்கிறார். இந்திய சினிமா வரலாற்றிலேயே பாகுபலி திரைப்படம் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement