பிரிட்டன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு இருக்கும் குந்தவையின் புகைப்படம் என்று நெட்டிசன்கள் பகிரும் புகைப்படம். உண்மை என்ன ?

0
750
trisha
- Advertisement -

சோழ இளவரசி குந்தவையின் அரிய புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் படுவைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் 70 ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக இயக்குநர் மணிரத்னம் இயக்கி இருக்கிறார். இந்த கதையை பல பேர் முயற்சி செய்து இருந்தார்கள். ஆனால், அதை மணிரத்னம் தான் சாதித்து காட்டி இருக்கிறார். பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக உருவாகி இருக்கிறது.

-விளம்பரம்-

அதுமட்டும் இல்லாமல் மணிரத்னத்தின் திரை வாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரம்மாண்டமாக இந்த திரைப்படம் தயாராகி இருக்கிறது. இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், கார்த்தி, ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரகுமான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் என சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள்.

- Advertisement -

பொன்னியின் செல்வன் படம்:

இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தில் ரவிவர்மன் ஒளிப்பதிவாளராகவும், தோட்டாதரணி கலை இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார்கள். அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த பொன்னியின் செல்வன் படம் சமீபத்தில் தான் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது. மேலும், தமிழ் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் உலக சினிமா ரசிகர்களும் பொன்னியின் செல்வன் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

படம் குறித்த தகவல்:

படம் வெளியாகி ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என அனைவரும் மத்தியிலும் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. அதோடு படம் வெளியாகி 400 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்திருக்கிறது. இனிவரும் நாட்களில் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, இந்த படத்தில் சோழ இளவரசியின் குந்தவை கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் திரிஷா நடித்திருந்தார்.

-விளம்பரம்-

குந்தவை அரிய புகைப்படம்:

இந்நிலையில் சோசியல் மீடியாவில் பயனர் ஒருவர், மலேசியா நாட்டில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டிருக்கும் சோழ இளவரசி குந்தவையின் ஒரே அரிய புகைப்படம்! ராஜராஜன் வழிவந்த இந்து சொந்தங்களே இதை அதிகம் ஷேர் செய்து நம் சோழர்களின் பெருமையை நிலை நாட்டுங்கள் என்று பதிவிட்டிருக்கிறார். தற்போது இந்த புகைப்படம் தான் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்த பலரும், இது சோழ இளவரசி குந்தவையின் ஓவியமே கிடையாது. அப்போது கேமரா எதுவுமே இல்லை என பலரும் கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.

நெட்டிசன் பதிவிட்ட பதிவு:

அது மட்டும் இல்லாமல் இந்த புகைப்படம் யாருடையது என்று நெட்டிசன்கள் ஆராய்ந்த போது, அசத்தப்போவது யாரு, கருப்பசாமி குத்தகைக்காரர் திரைப்படத்தில் நடித்த நகைச்சுவை நடிகர் வெங்கடேஷ் ஆறுமுகம் என்பவர் தான் இதை சோசியல் மீடியாவில் பதிவிட்டிருந்தார். அதில் அவர், நான் இதை ஒரு நையாண்டி பதிவாக தான் முகநூல் பக்கத்தில் பதிவிட்டு இருந்தேன். ஆனால், இதனை உண்மை என நம்பி சிலர் தங்களது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். ரெட்டிட்(Reddit) இணையத்தளத்தில் “1872ல் மெட்ராஸ் மாகாணத்தில் உள்ள மணப்பெண்” என்ற தலைப்பில் இந்தப் புகைப்படம் பதிவிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement