பொன்னியின் செல்வன் 2வில் வந்த மாதுளி யார் தெரியுமா ? வைரலாகும் இன்ஸ்டா போட்டோஸ்

0
517
madhuli
- Advertisement -

பொன்னியின் செல்வன் 2 படத்தில் மாதுளியாக வரும் நடிகை குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. வித்தியாசமான படைப்புகளின் மூலம் தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மணிரத்னம். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் பல ஆண்டு கால கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக எடுத்து இருக்கிறார் மணிரத்தினம்.

-விளம்பரம்-

இதனை பல பேர் முயற்சித்து இருந்தார்கள். ஆனால், அதை மணிரத்தினம் தான் சாதித்து காட்டி இருக்கிறார். மேலும், இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், கார்த்தி, ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ரகுமான், கிஷோர், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, பாலாஜி சக்திவேல் என சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார்.

- Advertisement -

பொன்னியின் செல்வன் 2:

இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி இருந்தது. இந்த படத்தின் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாக கடந்த வாரம் தான் வெளியாகி இருக்கிறது. இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் பார்த்து பிரபலங்கள், ரசிகர்கள் எனும் என பலரும் பாராட்டி வந்தார்கள்.

படம் குறித்த தகவல்:

அதோடு பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், அருண்மொழிவர்மனாக ஜெயம் ரவி, வந்திய தேவனாக கார்த்தி, குந்தவையாக திரிஷா, நந்தினியாக ஐஸ்வர்யாராய் என ஒவ்வொரு கதாபாத்திரங்கள் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. அந்த வகையில் படத்தில் மதுராந்தகன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் ரகுமான்.

-விளம்பரம்-

மாதுளி குறித்த தகவல்:

இவர் ராஷ்டிரகூட மன்னனின் மகள்தான் மாதுளி. படத்தில் இவருக்கு வசனம் எதுவும் இருக்காது. இருந்தாலும், இவர் கதாபாத்திரம் ரசிகர்கள் பலரை கவர்ந்தது. மேலும், யார் இந்த பெண்? என்று ரசிகர்கள் இவரை குறித்து தேட ஆரம்பித்தார்கள். இந்நிலையில் மாதுளியாக நடித்தவர் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகியிருக்கிறது. பொன்னியின் செல்வன் 2 படத்தில் மாதுளியாக நடித்தவர் ஸ்ரீமா உபாத்யாயா.

ஸ்ரீமா உபாத்யாயா பற்றிய விவரம்:

இவர் பெங்களூரை சேர்ந்தவர். இவர் ஒரு நடன கலைஞர். பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் தான் இவர் சினிமாவுலகில் நடிகையாக அறிமுகமாகி இருக்கிறார். முதல் படத்திலேயே இவர் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் தற்போது இவர் மாடன் உடையில் இருக்கும் புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதை பார்த்து ரசிகர்கள் பலரும், அமைதியாக வரும் மாதுளியா இவர்! என்று ஆச்சரியத்தில் புகைப்படத்திற்கு லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.

Advertisement