எப்படி இருக்கிறது மணிரத்னத்தின் கனவுப்படம் ‘பொன்னியின் செல்வன்’ – முழு விமர்சனம் இதோ.

0
446
ponniyin
- Advertisement -

மிக பிரமாண்டமாக பல ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக இயக்குநர் மணிரத்னம் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், கார்த்தி, ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் என சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தில் ரவிவர்மன் ஒளிப்பதிவாளராகவும், தோட்டாதரணி கலை இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார்கள். அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த பொன்னியின் செல்வன் படம் இன்று பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-

கதைக்களம்:

சோழ சாம்ராஜ்யத்தின் மாமன்னன் சுந்தர சோழர் உடல் நல குறைவால் நோய்வாய்ப்பட்டு தஞ்சையில் இருக்கிறார். இவருடைய பிள்ளைகள் ஆதித்ய கரிகாலன், அருள்மொழி வர்மன், குந்தவை ஆவார்கள். இதில் இவருடைய மகன்களான ஆதித்ய கரிகாலனும், அருள் மொழி வர்மனும் ஒவ்வொரு திசையில் போர் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த சமயத்தில் வானில் ஒரு வால் நட்சத்திரம் உண்டாகிறது. இந்த வால் நட்சத்திரம் மறையும் போது சோழ இரத்தம் ஒன்றை பலிக் கொல்லும் என்பது தான் நியதி.

- Advertisement -

இப்போது தான் கதை தொடங்குகிறது. மாமன்னன் சுந்தரசோழரின் பெரியப்பா பையனான மதுராந்தகன் சோழ சிம்மாசனத்தின் மீது ஆசை கொள்கிறான். அவனை அரியணை ஏற்ற பழுவேட்டரையர்களும் சிற்றரசர்களும் ரகசியமாக திட்டம் தீட்டுகிறார்கள். இன்னொரு பக்கம், பழுவேட்டரையரின் இளம் மனைவி நந்தினி அவர்கள் முன்னாள் காதலனும், வீரபாண்டியனின் தலையைக் கொன்ற ஆதித்ய கரிகாலனை கொல்ல பாண்டியர்களுடன் சேர்ந்து சதி செய்கிறாள்.

ponniyinselvan

பின் சோழ சாம்ராஜ்யத்தை வஞ்சமும், துரோகமும் சூழ்ந்து இருக்கிறது. இந்த நிலையில் ஆதித்யகரிகாலனையும், அருள்மொழியையும் தஞ்சைக்கு வரவழைத்து சோழ நாடு உள்நாட்டு போர்களால் அழியாமல் தடுக்க திட்டமிடுகிறார் அவருடைய தங்கையும், இளவரசியமான குந்தவை. அப்போதுதான் ஆதித்த கரிகாலனிடம் இருந்து செய்தி ஒன்று வருகிறது. இந்த செய்தி படத்தின் நாயகன் வந்திய தேவன் கொண்டு வருகிறார்.

-விளம்பரம்-

வந்தியதேவன் செய்தி கொண்டு வரும் பயணம் வழியாக தான் படமே நகர்ந்து செல்கிறது. வந்திய தேவன் கொண்டு வந்த செய்தி என்ன? உள்நாட்டு சதிகளை ஆதித்ய கரிகாலனும், அருள்மொழி வர்மனும், குந்தவையும் எதிர்கொண்டார்களா? என்பது தான் படத்தின் சுவாரசியமே. 2500 பக்கங்கள் கொண்ட ஐந்து பாகங்கள் கொண்ட ஒரு நாவலை இரண்டு பாகமாக படம் எடுப்பது என்பது சவாலான ஒன்று. இதை தற்போது மணிரத்தினம் சாதித்து காட்டியிருக்கிறார்.

நாவலை படித்தவர்கள், படிக்காதவர்கள் என அனைவரையுமே சந்தோசப்படுத்தும் வகையில் படத்தை கொடுத்திருக்கிறார். மணிரத்தினத்தை தவிர இதை யாராலும் செய்து காட்ட முடியாது என்ற அளவிற்கு கதை இருக்கிறது. ஒவ்வொரு கதாபாத்திரங்களிடையே இருக்கும் நட்பு, பகை, வஞ்சம், காதல் என எல்லா உணர்வுகளையும் சரியாக மணிரத்தினம் காண்பித்திருக்கிறார். நாவலில் இருந்து பல பகுதிகளை நீக்கியும் சுருக்கியும் தன்னுடைய பாணியில் கதையை நகர்த்திருக்கிறார் மணிரத்தினம்.

ponniyin

படத்தின் பின்னணி இசை வேற லெவலில் இருக்கிறது. ரவிவர்மனின் ஒளிப்பதிவும், தோட்டா தரணியின் கலையும் படத்திற்கு கூடுதல் பலமாக இருக்கிறது. மிகப்பெரிய கதையினுடைய சுருக்கமான வடிவம் என்பதால் சில இடங்களில் சில கதாபாத்திரங்களின் பெயரை புரிந்து கொள்ள கஷ்டமாக இருக்கிறது.
படத்தில் நடிகர்களும் கதாபாத்திரங்களாகவே மின்னுகிறார்கள். 70 ஆண்டு கால எதிர்பார்ப்பு இன்று நிறைவேறியிருக்கிறது. தமிழ் சினிமாவின் பெருமையை வேறு ஒரு இடத்திற்கு கொண்டு சென்று விட்டார் என்று சொல்லலாம்.

நிறைகள் :

நடிகர்களின் நடிப்பு பிரமாதம்.

படத்தின் கலை இயக்குனருக்கு நிச்சயம் ஒரு பாராட்டு கொடுக்க வேண்டும்

இயக்குனரின் இயக்கம் சிறப்பு.

ஒளிப்பதிவும், பின்னணி இசையும் படத்திற்கு பக்க பலம்.

தமிழ் சினிமாவை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லும் படமாக இருக்கிறது.

vikram

குறைகள் :

சில கதாபாத்திரங்களின் பெயர்களை தான் நினைவில் வைத்துக் கொள்ள முடியவில்லை.

மேலும், நாவலில் இருந்த பல விஷங்கள் படத்தில் மிஸ்ஸிங். அதை இரண்டு பாகத்தில் சொல்லசத்தியமும் இல்லை

மற்றபடி பொன்னியின் செல்வன் படத்தை சொல்லிக் கொள்ளும்படி எந்த ஒரு குறையுமே இல்லை.

அனைத்து தரப்பு ரசிகர்களும் கொண்டாடும் படமாக பொன்னியின் செல்வன் இருக்கிறது.

மொத்தத்தில் பொன்னியின் செல்வன் – மக்களின் மனதை வென்றது.

Advertisement