கேன்ஸ் பட விழாவில் ‘ ரன்’ விவேக் போல் சூட்கேஸை பறிகொடுத்து தவித்த பீஸ்ட் நாயகி – செருப்பு விலை மட்டும் இத்தனை லட்சமாம்.

0
453
pooja
- Advertisement -

கேன்ஸ் விழாவில் பூஜா ஹெக்டேவின் சூட்கேஸ் திருடு போகி ரன் படத்தில் வரும் விவேக்கை போல அவதிப்பட்டுள்ளார். தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் பூஜா ஹெக்டே. இவர் தமிழ் சினிமாவில் 2012-ஆம் ஆண்டு வெளியான ‘முகமூடி’ படம் மூலம்’ அறிமுகமாகி இருந்தார். ஆனால், இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. ஆகையால், நடிகை பூஜா ஹெக்டேவிற்கு தமிழில் எந்த படத்திலும் நடிக்க வாய்ப்பு வரவில்லை. இதனால் இவர் தெலுங்கு திரையுலகிற்கு ஜம் பண்ணி விட்டார். பின் இவர் 2014-ஆம் ஆண்டு நடித்த ‘ஒக்க லைலா கோஷம்’ என்ற படம் டோலிவுட்டில் வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட் ஆகி இருந்தது. இப்படியே இவர் பல தெலுங்கு படத்தில் நடித்து இருந்தார். அதிலும் இவர் அல்லு அர்ஜுனாவுடன் இணைந்து நடித்த ‘அல வைகுந்தபுரமுலோ’ என்ற படம் நடித்த மெகா ஹிட்டாகி இருந்தது. சமீபத்தில் வெளிவந்து இருந்த விஜய்யின் பீஸ்ட் படத்தில் பூஜா ஹெக்டே நடித்து இருந்தார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருந்தார். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. ஆனால், இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.

இதையும் பாருங்க : 20 ஆண்டுகளுக்குப் பின் அஜித்துடன் இணையும் ‘தீனா’ பட நடிகர். அஜித்துக்கு ‘தல’னு பெயர் வர காரணமே இவர் தான்.

- Advertisement -

பூஜா ஹெக்டே திரைப்பயணம்:

அதோடு இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. ஆனால், பீஸ்ட் படத்தின் மூலமாகவே பூஜா ஹெக்டே பயங்கர பாப்புலராகி விட்டார் என்று சொல்லலாம். இதற்கிடையில் பூஜா அவர்கள் பிரபாஸ் உடன் சேர்ந்து ராதே ஷ்யாம் என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது. இந்த படம் தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் வெளியாகி இருந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. அதேபோல் சில வாரங்களுக்கு முன் சிரஞ்சீவி நடிப்பில் வெளியாகி இருந்த ‘ஆச்சார்யா’ படத்தில் பூஜா ஹெக்டே நடித்து இருந்தார். இந்த படத்தை கொரட்டால சிவா இயக்கி இருந்தார்.

பூஜா ஹெக்டே நடித்த படம்:

மேலும், இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டு வெளியாகி இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இந்நிலையில் கேன்ஸ் விழாவிற்கு சென்ற பூஜா ஹெக்டேவின் சூட்கேஸ் திருடு போன சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது 75 வது கேன்ஸ் திரைப்பட விழா அண்மையில் கோலாகலமாக தொடங்கி இருக்கிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதும், தங்களது படங்கள் திரையிடப்படுவதையும் மிகப்பெரிய கவுரவமாக சினிமா நட்சத்திரங்கள் கருதி வருகின்றனர்.

-விளம்பரம்-

கேன்ஸ் விழா:

இந்த விழாவில் இசையமைப்பாளர் உலக நாயகன் கமலஹாசன், ஏ ஆர் ரகுமான், பார்த்திபன், பா ரஞ்சித், மாதவன், தமன்னா, பாலிவுட் திரையுலகில் ஊர்வசி ரெளட்டாலா, தீபிகா படுகோனே, ஐஸ்வர்யா ராய் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தார்கள். மேலும், இந்த விழாவில் நடிகை பூஜா ஹெக்டே முதன்முறையாக கலந்து கொண்டிருந்தார். அங்கு அவர் சிவப்பு கம்பள வரவேற்பில் கவர்ச்சி உடையில் நடந்து வந்தார். அதில் அவர் அணிந்திருந்த கருப்பு நிற ஹீல்ஸ் செருப்பு அணிந்து இருந்தா. அதன் விலை மட்டும் 43 லட்சம். ஒரு சொகுசு கார் விலையில் செருப்பு அணிந்து கொண்டும், தங்க வைர நகைகளை போட்டும் பூஜா வந்திருந்தார்.

விழாவில் சூட்கேஸை தொலைத்த பூஜா:

இந்நிலையில் இவர் சிவப்பு கம்பள வரவேற்பில் வந்த உற்சாகத்தில் தான் கொண்டுவந்த சூட்கேசை தொலைத்து விட்டார். அந்த சூட்கேசில் விலை உயர்ந்த ஆடைகளும், நகைகளும் இருந்தது. காலையிலிருந்து இரவு வரை சாப்பிடாமலேயே பூஜாவும் அவருடைய உதவியாளர்களும் தேடி இருந்தார்கள். இருந்தும் அவருடைய சூட்கேஸ் கிடைக்கவில்லை. இனிமேல் தேடினாலும் கிடைக்காது என்று நினைத்து பூஜா அமைதியாகி விட்டார். அதிஷ்டவசமாக நகைகள் அனைத்தையும் பூஜா அணிந்திருந்ததால் ஆடைகள் மட்டும் தொலைந்துவிட்டது. அதுமட்டுமில்லாமல் சூட்கேசை பறிகொடுத்ததால் மாற்று உடை இன்றி பூஜா தவித்து இருந்தார் என்று கூறப்படுகிறது.

Advertisement