சார்பட்டா,துணிவு போன்ற படங்களில் நடித்த ஜான் கொக்கேன் மனைவியும் பிரபல தொகுப்பாளினியுமான பூஜாவின் வளைகாப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. SS மியூசிக் என்ற டிவி சேனலில் தொகுப்பாளினியாக தனது மீடியா பயணத்தை துவங்கினார் பூஜா ராமச்சந்திரன். அதன் பிறகு நடிகையாக அவதாரம் எடுத்தார் பூஜா ராமச்சந்திரன். நடிகையாக ‘காஞ்சனா’ என்ற சீரியல். முன்னணி டிவி சேனல்களில் ஒன்றான விஜய் டிவியில் பூஜா நடித்த இந்த ‘காஞ்சனா’ எனும் ஹாரர் த்ரில்லர் ஜானர் சீரியல் ஒளிபரப்பானது.
அதன் பிறகு சின்னத் திரையுடன் நமது பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்த நடிகை பூஜா ராமச்சந்திரன், அடுத்ததாக வெள்ளித் திரையிலும் நுழைந்தார். தமிழில் அடுத்ததாக சொதப்புவது எப்படி, நண்பன், பீட்சா, நண்பேன்டா, காஞ்சனா 2, புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம், களம்’ என அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார் பூஜா ராமச்சந்திரன்.2010-ஆம் ஆண்டு ‘SS மியூசிக்’ புகழ் VJ க்ரேயிக்கை திருமணம் செய்து கொண்டார் நடிகை பூஜா ராமச்சந்திரன்.
ஜான் கொக்கன் :
பின்னர் 2017-ஆம் ஆண்டு சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றுக் கொண்ட பூஜா ராமச்சந்திரன், நடிகர் ஜான் கொக்கனை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் கொண்டார். தேதி தான் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. ஜான் கொக்கன், பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
துணிவு படத்தில் ஜான் கொக்கன் :
இவர் சார்பட்டா படத்திற்கு முன்பே அஜித்தின் வீரம், ராஜமௌலியின் ‘பாகுபலி’ போன்ற படங்களில் நடித்துள்ளார். அதோடு கேஜிஃப் திரைப்படத்தில் மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான துணிவு படத்திலும் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். மேலும், கேப்டன் மில்லர் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கர்ப்பமான பூஜா :
இவரும் நடிகை பூஜா ராமச்சந்திரனும் கடந்த 2019 திருமணம் செய்து கொண்டனர். மேலும் சமீபத்தில் இருவரும் புகைப்படத்தை பகிர்ந்து பூஜா ராமச்சந்திரன் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்தார். மேலும் அந்த பதிவில் தங்களுடைய காதல் சண்டைகள், சிரிப்புகள் நிறைந்ததாக இருந்தது என்றும், விரைவில் தங்களுக்கு ஒரு அதிசயம் வரவிருப்பதை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் என்று கூறியிருந்தார்.
பூஜாவிற்கு நடந்த வளைகாப்பு :
கர்ப்பமாக இருக்கும் பூஜா அடிக்கடி ஃபோட்டோ சூட்களை நடத்தி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வந்தார். இப்படி ஒரு நிலையில் தற்போது நிறைமாத கர்ப்பமாக இருக்கும் பூஜாவிற்கு வளைகாப்பு நடத்தி அழகு பார்த்து இருக்கிறார் அவருடைய கணவர் ஜான். நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்ட இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பூஜா தன்னுடைய மின்சாரம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.