‘இனி வாழ்நாள் முழுவதும் இப்படித்தான்’ – தீவிர நோயால் பாதிக்கப்பட்ட நெஞ்சிருக்கும் வரை பட நடிகை.

0
310
poonam
- Advertisement -

தீவிர நோயால் நடிகை பூனம் கவுர் பாதிக்கப்பட்டிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமான நடிகையாக திகழ்பவர் பூனம் கவுர். இவர் ஹைதராபாத்தில் பிறந்தவர். பேஷன் டிசைனிங் படிப்பை முடித்துவிட்டு மாடலிங்கில் நுழைந்தார். இவர் மாடலிங் மூலம் தான் தன்னுடைய கேரியரை தொடங்கினார்.

-விளம்பரம்-
actress-poonam-kaur

அதன் பின் மாயாஜாலம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் தான் இவர் சினிமா உலகில் அறிமுகம் ஆனார்.
அதனை தொடர்ந்து இவர் தமிழில் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கிய நெஞ்சிருக்கும் வரை என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.. இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. மேலும், முதல் படத்திலேயே பூனம் கவுர் தமிழக ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

- Advertisement -

பூனம் கவுர் திரைப்பயணம்:

அப்படியே இவர் உன்னை போல் ஒருவன், பயணம், வெடி போன்ற பல படங்களில் நடித்திருந்தார். அதுமட்டும் இல்லாமல் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிற மொழிப் படங்களிலும் நடித்திருக்கிறார். இந்தியிலும் கூட சில படங்களிலும் இவர் நடித்து இருக்கிறார். பிறகு பெரியதாக இவருக்கு பட வாய்ப்புகள் அமையவில்லை. இருந்தாலும், இவர் எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கிறார்.

பூனம் கவுர் குறித்த தகவல்:

அந்த வகையில் சமீபத்தில் நடிகை பூனம் கவுர் அவர்கள் பிரபல இயக்குனரை விமர்சித்து பேசி இருந்த பதிவு இணையத்தில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. மேலும், இவர் தெலுங்கு சமூக செயல்பாட்டாளராக வலம் வருகிறார். கைத்தறி நெசவாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை முன்னிலைப்படுத்தும் விதமாக ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் இவர் பங்கேற்று இருந்தார்.

-விளம்பரம்-

பூனம் கவுரை பாதித்த நோய்:

இந்நிலையில் நடிகை பூனம் கவுர் ஃபைப்ரோமியால்ஜியா என்ற நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஃபைப்ரோமியால்ஜியா நோய் என்பது ஒரு பரவலான தசை கூட்டு வலியுடன் கூடிய சோர்வு, தூக்கம், நினைவாற்றல் மற்றும் மனநிலை மாற்றம் போன்ற பல பிரச்சனைகளை கொண்டது. இந்த பிரச்சனை பூனம் கவுருக்கு இருப்பது சமீபத்தில் தான் தெரிய வந்தது.

நோய் குறித்த தகவல்:

இதை மருத்துவர்கள் கண்டறிந்து அவரிடம் கூறினார்கள். மேலும், இந்த நோய் இருப்பவர்கள் தன்னுடைய வாழ்க்கை முறையை மாற்றி உடற்பயிற்சி, தெரபிகள், சிகிச்சை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த நோய் ஒருவருக்கு வந்து விட்டால் வாழ்நாள் முழுவதும் அதோடு அவர் பழகிக் கொள்ள வேண்டும். இதை மெடிக்கல் போர்ட்டல் கூறியிருக்கிறது. தற்போது பூனம் கவுர் இந்த நோயால் பாதிக்கபட்ட தகவல் சோசியல் மீடியாவில் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் பலருமே ஆறுதலாக கமெண்ட்ஸ் போட்டு வருகிறார்கள்.

Advertisement