சமூக வளைத்தளத்தில் ஆபாச விடியோக்கள் புகைப்படங்கள் என்று பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை பூனம் பாண்டே. இதுவரை இந்தியில் மூன்று படங்கள் மட்டுமே நடித்திருந்தலும் இணையத்தளத்தில் அம்மணி படு பேமஸ். இறுதியாக இந்தியில் ஜர்னி ஆப் கர்மா என்ற இந்தி படத்தில் நடித்திருந்தார். தற்போது பட வாய்ப்புகள் எதுவும் இல்லாத அடிக்கடி தன்னுடைய காதலுடன் மோசமாக பதவியை வெளியிட்டுவந்தார்.
சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி சர்ச்சையான விஷயங்களை பதிவிட்டு இருந்தார். 2011-ஆம் ஆண்டு இந்தியா கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றால் நிர்வாணமாக ஓடுவேன் எனக்கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர். அதே போல தன்னுடைய காதலுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை சமூக வளையதளத்தில் வெளியிட்டு வைரலானது.
இதனால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், இவர் ஆபாச புகைப்படங்களை தனது பூனம் பாண்டே ஆப் மூலம் விற்றும் வருகிறார்.இப்படி தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் போன பூனம் பாண்டே, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தான் மிகவும் ரகசியமாக திருமணத்தை முடித்தார். தனது நீண்ட நாள் காதலரான சாம் என்பவரை நடிகை பூனம் பாண்டே திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட பூனம் பாண்டே உன்னுடன் ஏழேழு ஜென்மம் வாழ காத்துக்கொண்டு இருக்கிறேன்” என்று பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில் திருமணம் முடிந்து ஹனிமூன் சென்ற போதே தன்னை பலாத்காரம் செய்ததுடன், தன்னை தாக்கி கொடுமைப்படுத்தியதாக பூனம் பாண்டே போலீசில் பரபரப்பு புகார் அளித்தார்.
அதன் பின்னர் மீண்டும் இருவரும் சமாதானம் ஆகி ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் தன் கணவர் தன்னை கொடுமையாக தாக்கியதாக பூனம் பாண்டே அளித்த புகாரின் பெயரில் அவரது கணவர் கைது செய்யப்ட்டுள்ளார். கணவர் தாக்கியதில் தலை, முகம், கண்கள் என்று பல இடங்களில் காயமடைந்த பூனம் பாண்டே தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாராம்.