மகள் பேசும் கெட்ட வார்த்தைகள், Entertainmentகாக தான் Bully பண்ணாங்க – பூர்ணிமாவின் தந்தை கொடுத்த முட்டு

0
605
- Advertisement -

தமிழில் அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 76 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அனன்யா, கூல் குரேஷி ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.

-விளம்பரம்-

மேலும் இந்த நிகழ்ச்சியில் பிரபலமான நபர்களில் ஒருவர் பூர்ணிமா ரவி. இவர் ஷார்ட் பிலிம், ரீல்ஸ் வீடியோக்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இதில் இவர் பதிவிடும் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இதன் பிரபலத்தினால் தான் இவருக்கு பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து பூர்ணிமா, மாயா உடன் சேர்ந்து கொண்டு மற்ற போட்டியாளர்களை கிண்டல் கேலி செய்வது, வம்பிழுப்பது என்ற வேலைகளை செய்து இருக்கிறார்.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பூர்ணிமா:

இதனால இவரை ரசிகர்கள் கடுமையாக கண்டித்து இருந்தார்கள். குறிப்பாக அர்ச்சனா விஷயத்தில் பூர்ணிமா செய்தது மிகவும் தவறான செயல் என்று பலரும் கூறியிருந்தார்கள். இருந்தும் பூர்ணிமா மாயாவுடன் சேர்ந்து கொண்டு தன்னுடைய வேலையை செய்து கொண்டுதான் இருந்தார். அதோடு வாரம் வாரம் கமல் இடமும் திட்டு வாங்கிக் கொண்டும் இருந்தார் பூர்ணிமா. அதிலும் இந்த வாரம் பூர்ணிமா, கமல் சொன்னால் சமாளித்துக் கொள்ளலாம் என்பது போல் பேசி இருக்கிறார். இதை கவனித்த கமல், நீங்கள் என்ன சொன்னாலும் நாங்கள் ஏற்றுக் கொள்வோமா? காதில் பூ வைத்திருக்கிறோமா? எத்தனை பேருக்கு பூ வைப்பீர்கள் என்றெல்லாம் விமர்சித்து பேசுகிறார்.

விமர்சித்த கமல்:

பூர்ணிமாவால் எதுவுமே பேச முடியாமல் அமைதியாக இருக்கிறார். நேற்று நிகழ்ச்சி முடியும் வரையும் பூர்ணிமாவை குறி வைத்து தான் கமல் பேசியிருந்தார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பாக பூர்ணிமாவின் தந்தை பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர், இதுவரை எந்த பிக் பாஸ் சீசனிலுமே இல்லாத அளவில் ஒரு பெண் இருமுறை கேப்டன்ஷிப் பெற்றது பூர்ணிமா தான். பூர்ணிமாவுக்கு மெத்தனம் தலைக்கனம் என்று எதுவுமே இல்லை. அவர் புரியாமல் தான் சில தவறுகளை செய்கிறார். திடீரென வைல்டு கார்ட் போட்டியாளர்கள் வந்ததால் பூர்ணிமாவால் ஏற்றுக் கொள்ள முடியாமல் அப்படி நடந்து கொண்டார்.

-விளம்பரம்-

பூர்ணிமா தந்தை பேட்டி:

முன்னாடியே வைல்ட் கார்ட் இருக்கும் என்பது தெரிந்ததுதான். அதைப் புரிந்து விளையாடினாலே போதும். என்டர்டைன்மென்ட் மூலமாக பூர்ணிமா செய்தது புள்ளி கேங்கில் அவர் இருப்பதாக சொன்னார்கள். பூர்ணிமாவுக்கு மாயாவி நட்பு ரொம்ப அதிகமாக உள்ளது. அதேபோல் அர்ச்சனா மாயாவுக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. பூர்ணிமா இரட்டையர்த்தம் கொண்ட வார்த்தை பேசுவது தவறுதான். அதை பூர்ணிமா மாற்றிக் கொள்வார். வெளியே வந்தால் நாங்கள் அவருக்கு அறிவுறுத்துவோம். பூர்ணிமாவுக்கும் விஷ்ணுமாக்கும் உள்ளே இருப்பது நட்பு மட்டும்தான். வெளியே வந்து பூர்ணிமாவுக்கு பிடித்திருந்தால் கூட நாங்கள் ஒன்றும் சொல்ல மாட்டோம்.

கமல் குறித்து சொன்னது:

வீடு இருந்தால் சண்டை இருக்கத்தான் செய்யும். அதுபோல தான் பிக் பாஸ் வீட்டில் சண்டை சச்சரவு இருக்கும். பூர்ணிமாவுக்கு போட்டியாளராக தினேஷ், அர்ச்சனா இருக்கிறார்கள். என் வீட்டை போல தான் ஒவ்வொரு வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள். என் மகளை பேசுவதைப் போல் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் பெண்களை பேசினால் சங்கடம்தான் ஏற்படும். அதை உணர்ந்து தரம் குறைந்த விமர்சனங்களை வைப்பதை தவிர்க்கலாம். ஃபேமிலி டாஸ்கில் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றால் என் பொண்ணுக்கு அதிகமாக பேசாத, யாராவது உனக்கு அட்வைஸ் கொடுத்தால் அதை ஏற்றுக்கொள் என்று சொல்லுவேன். கமலஹாசன் பூர்ணிமா மீது வன்மத்தை காட்டவில்லை. தவறுகளை சுட்டிக்காட்டி இருக்கிறார். பூர்ணிமாவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் கமலஹாசன் பேசவில்லை. அவர் செய்த தவறை சுட்டிக்காட்டுகிறார் அவ்வளவுதான் என்று கூறியிருக்கிறார்.

Advertisement