தனது குழந்தை பிறந்ததை மனைவியோடு சேர்ந்து அறிவித்த பூவே பூச்சூடாவா சீரியல் நடிகர்.

0
1676

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பூவே பூச்சூடவா’ சீரியல் நடிகருக்கு குழந்தை பிறந்துள்ளது. ஒரு காலத்தில் ஜீ தொலைக்காட்சி சேனல் நம்பர் என்ன என்பது கூட தொலைக்காட்சி ரசிகர்களுக்கு தெரியாது. ஆனால், சமீப காலமாக தொலைக்காட்சி ரசிகர்கள் பலரும் ஜீ தமிழ் தொழிகாட்சியின் ரசிகர்களாக மாறியுள்ளனர். அதற்கு முக்கிய காரணமே தற்போது இந்த தொலைகட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு புதிய தொடர்கள் தான். அந்த வகையில் இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பூவே பூச்சூடவா சீரியல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பபை பெற்றுள்ளது.

868 எபிஸோடுகளை கடந்துள்ள இந்த சீரியலில் சிவா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் கார்த்திக் வாசுதேவன். இவருக்கு முன்னர் இந்த கதாபாத்திரத்தில் ரக்ஷிதாவின் கணவர் நடித்து வந்திருந்தார். நடிகர் கார்த்திக் வாசுதேவன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடரில் நடித்திருக்கிறார். அதுபோக காதல் முதல் கல்யாணம் வரை போன்ற சீரியல்களிலும் நடித்து இருக்கிறார்.

- Advertisement -

ஆனால் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்னவோ பூவே பூச்சூடவா சீரியல் தான். கார்த்திக் வாசுதேவன் கடந்த 2018 ஆம் ஆண்டு நந்துஜை என்பவரை திருமணம் செய்துகொண்டார். இப்படி ஒரு நிலையில் இந்த தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார் கார்த்திக்.

சமீபத்தில் தான் இந்த தொடரில் நடித்து வரும் தனலட்சுமி தனது நீண்ட வருட காதலரான சிவா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதே போல இந்த சீரியலில் நடித்து வரும் ரவீனா தஹா விஜய் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் ‘மௌன ராகம் 2’ தொடரில் சக்தி கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement