டேமேஜ் ஆன பீசு நானே,ஜோக்கர் இப்போ ஹீரோ ஆனேன் – ஜீ தமிழ் சீரியல் நடிகையின் வேற லெவல் Transformation

0
3377
kiruthika
- Advertisement -

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பூவே பூச்சூடவா’ சீரியல் நடிகைக்கு திருமணம் முடிந்துள்ளது. ஒரு காலத்தில் ஜீ தொலைக்காட்சி சேனல் நம்பர் என்ன என்பது கூட தொலைக்காட்சி ரசிகர்களுக்கு தெரியாது. ஆனால், சமீப காலமாக தொலைக்காட்சி ரசிகர்கள் பலரும் ஜீ தமிழ் தொழிகாட்சியின் ரசிகர்களாக மாறியுள்ளனர். அதற்கு முக்கிய காரணமே தற்போது இந்த தொலைகட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு புதிய தொடர்கள் தான். அந்த வகையில் பூவே பூச்சூடவா சீரியலில் ஒன்று. இந்த தொலைக்காட்சியின் வெற்றி சீரியலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

-விளம்பரம்-

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பூச்சூடவா சீரியலிலும் அதிரடி மாற்றம் செய்யப்பட்டு இருந்தது . சீரியலின் நாயகன்  தினேஷ் கோபாலசாமி மாற்றப்பட்டு இருந்தார். அவருக்கு பதில் கார்த்திக் நடித்து வருகிறார். இந்த சீரியலில் நடித்து வரும் ரவீனாதாஹா தற்போது விஜய் டிவி மௌன ராகம் 2வில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை கிருத்திகா லட்டு. இவர் திருமுருகன் இயக்கிய  தேன் நிலவு என்னும் சீரியல் மூலம் மூலம் அறிமுகமானவர்.

இதையும் பாருங்க : தன்னுடன் நடித்தவருடனே திருமணம் – கலைகட்டிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் திருமணம் – ட்ரெண்டிங் வீடியோ இதோ.

- Advertisement -

இந்த சீரியலுக்கு பின்னர் இவர் பொன்னூஞ்சல் மற்றும் பைரவி ஆகிய சீரியல்களின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பிறகு அடுத்த கட்டமான சூப்பர் மாம் என்னும் விளையாட்டு நிகழ்ச்சியில், தனது மகளுடன் சேர்ந்து கலந்துகொண்டார்.  இவர் சீரியல் மட்டுமில்லாமல் சென்னை 28 இரண்டாம் பாகம் மற்றும் சந்தானம் நடித்த இனிமே இப்படித்தான் படத்தில் நாயகியின் தோழியாக நடித்துள்ளார். ஆனால், இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது என்னவோ ‘பூவே பூச்சுடவா’ சீரியல் தான்.

சமீபத்தில் தனது இன்ஸ்டாவில் தனது கடந்த காலத்தில் எடுக்கப்பட்ட ஒரு சில ஃபோட்டோக்களுடன், தான் இப்போது இருக்கும் ஸ்டைலிஷ் லுக்குடன் கூடிய ஃபோட்டோக்களையும் இணைத்து ஒரு வீடியோவாக தயாரித்து “ஜோக்கர் இப்போ ஹீரோயின் ஆன தருணம்” என்று கேப்ஷன் கொடுத்துள்ளார்.உண்மையில் அந்த வீடியோவில் முதலில் தோன்றுவது நடிகை கிருத்திகா தானா என்ற சந்தேகம் எழுகிறது. ஆனால், தற்போது படு ஸ்லிம்மாக மாறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement