நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து கொண்டே செல்வதால் மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றார்கள். கொரோனாவின் தாக்கம் போரை விட மிக கொடுமையாக உள்ளது. இந்த வைரஸ் தாக்கிய நபரை குணப்படுத்த இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் மக்கள் அனைவரும் கவலையில் உள்ளார்கள். இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,380 ஆக உள்ளது. 414 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளார்கள்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் பிரதமர் மோடி அவர்கள் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்திருந்தார். ஆனால், கொரோனா பரவுதல் குறைந்தபாடு இல்லை என்பதால் இன்னும் இந்த உத்தரவை மே 3 ஆம் தேதி வரை நீட்டித்து உள்ளார். மேலும், சினிமா பிரபலங்கள் முதல் சமூக ஆர்வலர்கள் வரை என பல பேர் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு வீடியோக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்கள்.
இதையும் பாருங்க : என் மகனை சந்திக்க காத்துகொண்டு இருக்கிறேன். இது தான் அவன் – விஷ்ணு விஷால் உருக்கம்.
இதனால் மக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என்பதற்காக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் போக்குவரத்துகள், கடைகள், பொது இடங்கள் என அனைத்தும் தொடர்ந்து மூடப்பட்டு வருகிறது. கொரோனாவினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு நாடு முழுவதும் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இந்த கொரோனாவினால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளது தினந்தோறும் கூலி செய்து வாழும் மக்கள் தான்.
அன்றாடம் வேலைக்கு சென்று அதன் மூலம் வரும் பணத்தை வைத்து தான் பல மக்கள் தங்களுடைய வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் இவர்களுடைய வாழ்க்கை கதிகலங்கி உள்ளது. சினிமாவில் இருக்கும் பல தொழிலாளர்கள் மற்றும் தினக்கூலி செய்யும் ஏழைகள் என லட்சக்கணக்கான பேர் கஷ்டப்பட்டு வருகிறார்கள். இதனால் இவர்களுக்கு சினிமா பிரபலங்கள் தங்களால் முடிந்த நிதி உதவிகளை செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் பிரபல நடிகர் விக்னேஷ் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களுக்காக தன்னுடைய பிரியாணி கடையை திறந்து வைத்திருக்கிறார். நடிகர் விக்னேஷ் அவர்கள் சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் சேலம் ஆர்ஆர் பிரியாணி என்ற (ஹோட்டல்) கடையை நடத்தி வருகிறார். இந்நிலையில் தனது சினிமா துறையை சேர்ந்த ஊழியர்களுக்கு இந்த ஊரடங்கு சமயத்தில் இலவசமாக உணவு வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
இதையும் பாருங்க : பாய்ஸ் படத்திற்கு முன்பாகவே மாதவனின் இந்த படத்தில் பஸ் பயணியாக முகம் காட்டியுள்ள சித்தார்த்.
பசித்தவர்களுக்கு உணவு அளிப்பது போல் வேறு எந்த உதவியும் இருக்கிறதா என்றும் அவர் கூறியுள்ளார். தற்போது இவர் செய்த உதவியை வீடியோவாக சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார்கள். அதில் அவர் மாலை 7 முதல் 9 மணி வரை இலவசமாக உணவை சாப்பிடுமாறு அழைத்துள்ளார். இதனை பார்த்து பலரும் விக்னேஷ்க்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர் விக்னேஷ். இவர் 1992 ஆம் ஆண்டு வெளியான சின்னதாயி என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் கிழக்கு சீமையிலே, நாடோடி மன்னன், மண்ணுக்கு மரியாதை, என்னை தாலாட்ட வருவாளா,சூரி உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.