பாய்ஸ் படத்திற்கு முன்பாகவே மாதவனின் இந்த படத்தில் பஸ் பயணியாக முகம் காட்டியுள்ள சித்தார்த்.

0
10849
siddharth
- Advertisement -

சினிமாவில் பணியாற்றும் அனைவருக்கும் ஒரு தனித்துவமான திறமை இருக்கும். ஆனால், அந்த திறமையையும் தாண்டி லக் என்ற விஷயமும் எப்போது வருகிறதோ, அப்போது தான் வாய்ப்புகள் குவியும். அப்படி குவியும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டவர்கள் ஏராளம். அவர்கள் அனைவரும் அடுத்தடுத்து சினிமாவில் பல சாதனைகள் செய்து வெற்றியடைகிறார்கள். இந்த லிஸ்டில் நடிகர் சித்தார்த்திற்கும் நிச்சயம் ஒரு இடம் உண்டு. 2002-ஆம் ஆண்டு வெளி வந்த படம் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’. மாதவன் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தில் சித்தார்த் மிக சிறிய வேடத்தில் அறிமுகமாகியிருந்தார்.

-விளம்பரம்-

இப்படத்தினை தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கியிருந்தார். இதில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தது மட்டுமின்றி, இயக்குநர் மணிரத்னமிடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றினாராம் சித்தார்த். தற்போது, சமூக வலைத்தளத்தில் சித்தார்த் அறிமுகமான ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாக பரவி கொண்டிருக்கிறது.

இதையும் பாருங்க : இதெல்லாம் பெண்கள் கிட்ட கேட்க கூடாதுனு உங்களுக்கு தெரியாதா ? கடுப்பான சாட்டை பட நடிகை.

- Advertisement -

‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்துக்கு பிறகு, ‘பாய்ஸ்’ என்ற படத்துக்கு பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர், படத்தில் நடிக்க புதுமுக நடிகர்களை தேடிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது, பிரபல எழுத்தாளர் சுஜாதா தான் சித்தார்த்தை நடிக்க வைக்க சொல்லி ஷங்கரிடம் சிபாரிசு செய்திருக்கிறார். இதில் சித்தார்த்துடன் நகுல், பரத், தமன், மணிகண்டன், ஜெனிலியா, விவேக் ஆகியோர் நடித்திருந்தனர்.

‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த இப்படத்தின் பாடல்கள் பெரிதும் பேசப்பட்டது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது. அதன் பிறகு மணிரத்னமின் ‘ஆய்த எழுத்து’ படத்தில் சித்தார்த் நடித்தார். தமிழ் திரையுலகுடன் நமது திரை பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்த சித்தார்த், அடுத்ததாக தெலுங்கு திரையுலகில் நுழைந்தார்.

இதையும் பாருங்க : ட்ரவ்சர் அணியாமல் மீட்டிங். இது தான் புது ட்ரெண்டாம்.எமி ஜாக்சன் பதிவிட்ட புகைப்படம்.

-விளம்பரம்-

தெலுங்கில் தொடர்ந்து இரண்டு படங்களில் நடித்த சித்தார்த், ஹிந்தி திரையுலகில் அமீர் கானின் ‘ரங் தே பசந்தி’ என்ற படத்தின் மூலம் என்ட்ரியானார். அதன் பிறகு தெலுங்கில் பல படங்களில் நடித்து பிரபல நடிகராக வலம் வரத் துவங்கினார் சித்தார்த். தமிழிலும் ‘காதலில் சொதப்புவது எப்படி, ஜிகர்தண்டா, அரண்மனை 2’ போன்ற பல படங்களில் நடித்தார். தற்போது, தமிழில் ‘டக்கர்’ மற்றும் ‘இந்தியன் 2’ என அடுத்தடுத்து இரண்டு படங்கள் கைவசம் வைத்திருக்கிறார் சித்தார்த்.

Advertisement