இது என்னடா அஜித் படத்துக்கு வந்த சோதனை – துணிவு படத்தை முறியடித்த போர் தொழில்.(கண்டன்ட் தான் மேட்டர் )

0
2348
Porthozhil
- Advertisement -

அஜித்தின் துணிவு படத்தின் வசூல் சாதனையை போர் தொழில் படம் முறியடித்திற்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக அசோக் செல்வன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் போர் தொழில். இந்த படத்தில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.

-விளம்பரம்-

படத்தில் உயர் க்ரைம் ப்ரான்ச் அதிகாரியாக சரத்குமார் இருக்கிறார். இவர் ரொம்ப டெரரான ஆள். இவருடைய தலைமையின் கீழ் வேலை செய்பவர் தான் அசோக் செல்வன். அசோக் விளையாட்டுப் பிள்ளையாக அதிக புத்திசாலி கொண்ட இளைஞராக இருக்கிறார். இவர் புதிதாக போஸ்டிங் வாங்கி வருகிறார். இப்படி ஒரு சூழ்நிலையில் தான் திருச்சியை மையமாக வைத்து ஒரே மாதிரியான தொடர் கொலைகள் நடந்து கொண்டிருக்கிறது.

- Advertisement -

போர் தொழில் படம்:

இந்த கொலைகளில் எந்தவித தடயங்களும் இல்லாமல் நடக்கிறது. இதனால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டிருக்கிறது. மேலும், இந்த வழக்கு அசோக் செல்வன்- சரத்குமார் இடம் வருகிறது. இந்த வழக்கை கையில் எடுத்தவுடன் சரத்குமார் கடுமையாக போராடுகிறார். ஆனால், அசோக் செல்வன் விளையாட்டுத்தனமாக கடுப்பேற்றும்படி நடந்து கொள்கிறார். இன்னொரு பக்கம் சீரியல் கொலைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

படத்தின் கதை:

இன்னொரு பக்கம் போலீசுக்குள் இடையில் பாலிடிக்ஸ் நடக்கிறது. இதையெல்லாம் தாண்டி தொடர் கொலைகளை செய்யும் நபர்களை சரத்குமார் -அசோக் செல்வன் இணைந்து கண்டுபிடித்தார்களா? இந்த கொலையின் பின்னணி என்ன? என்று சொல்வதே படத்தின் மீதி கதை. படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமில்லாமல் படத்தை பார்த்து பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

படத்தின் வசூல்:

அதுமட்டுமில்லாமல் இந்த படம் உலக அளவில் 30 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அஜித்தின் துணிவு படத்தின் வசூல் சாதனையை போர் தொழில் படம் செய்திருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது, சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியாகியிருந்த படம் துணிவு. இந்த படத்தை இயக்குனர் வினோத்குமார் இயக்கியிருந்தார். கடந்த ஜனவரி மாதம் தான் இந்த படம் வெளியாகியிருந்தது.

சாதனையை முறியடித்த போர் தொழில்:

இந்த படம் கேரள பாக்ஸ் ஆபிஸில் 5 கோடி வரை வசூல் செய்துள்ளது. தற்போது சரத்குமார்- அசோக்செல்வனின் நடிப்பில் வெளியாகியிருக்கும் போர் தொழில் திரைப்படம் கேரளா பாக்ஸ் ஆபிஸில் 5.1 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கிறது. துணிவு படத்தின் பாக்ஸ் ஆபீஸ் சாதனையை போர் தொழில் படம் முறியடித்திருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement