இனி துக்க நிகழ்வுகளில் வீடியோ எடுத்தால் – தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி அறிவிப்பு

0
2097
- Advertisement -

விஜய் ஆண்டனி வீட்டில் நடந்த துக்க நிகழ்வு தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் எடுத்திருக்கும் அதிரடி நடவடிக்கை தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் இசையமைப்பாளராக இருந்து நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. தற்போது இவர் இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்ந்து வருகிறார்.

-விளம்பரம்-
VijayAntony

இதனிடையே கடந்த 2006ஆம் ஆண்டு பாத்திமா என்பவரை விஜய் ஆண்டனி திருமணம் செய்து கொண்டார். இவர் ஹீரோவாக நடித்த நான் என்ற படத்தை தயாரித்தது அவரது மனைவி பாத்திமா தான். இவரது மனைவி பாத்திமா டீவி தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார். பின்னர் விஜய் ஆண்டனியை பேட்டி எடுக்க சென்ற போது இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. பின் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.

- Advertisement -

விஜய் ஆண்டனி மகள் தற்கொலை:

அதில் விஜய் ஆண்டனியின் 16 வயது மகள் மீரா. இவர் சென்னையில் உள்ள சர்ச் பார்க் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்து இருந்தார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் அதிகாலை அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு இருக்கிறார். இதை அந்த வீட்டின் பணியாளர் பார்த்து அலறி இருந்தார். இதன்பின் காவேரி மருத்துவமனைக்கு அவர் கொண்டு சொல்லப்பட்டாலும் சிறுமி மீரா ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

போலீஸ் விசாரணை:

மீராவின் இறப்பிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் நேரில் வந்து விஜய் ஆண்டனிக்கு ஆறுதல் கூறியிருக்கிறார்கள். மீராவுடன் படித்த பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களும் மீராவின் நினைவுகளை பகிர்ந்து கண்ணீர் விட்டு அழுது இருக்கிறார்கள். மேலும், இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். அப்போது மீரா ஏற்கனவே மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார். இதனால் இவர் தற்கொலை செய்திருப்பதாக கூறப்படுகிறது.

-விளம்பரம்-

மீரா இறப்புக்கு காரணம்:

இது தொடர்பாக இவருடைய பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களிடம் விசாரித்த போது மீரா அந்த மாதிரி எந்த ஒரு சிகிச்சை எடுத்ததாக எங்களுக்கு தெரியவில்லை என்று கூறிவிட்டார்கள். ஆனால், மீரா மனநல மருத்துவர்கள் இடம் சிகிச்சை எடுத்தது குறித்து போலீஸ் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. தன் மகளின் பிரிவை தாங்க முடியாமல் விஜய் ஆண்டனியும், அவரின் மனைவியும் தரையில் விழுந்து கதறி அழுது இருக்கிறார்கள். இந்த சமயத்தில் சிலர் எல்லை மீறி நடந்து கொண்டதாக சமூக வலைத்தளங்களில் சர்ச்சைகள் எழுந்திருக்கிறது.

தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை:

இதனால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திரை பிரபலங்கள் பலரும் கோரிக்கை வைத்திருக்கின்றனர். இந்த நிலையில் இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் அதற்கான நடவடிக்கையை எடுத்து இருக்கிறது. அதில், இனிமேல் பிரபலங்கள் மற்றும் சினிமா துறையினர் துக்க நிகழ்வுகளில் வீடியோ அனுமதி மறுப்பு. அப்படி எடுக்க வேண்டும் என்றால் காவல்துறை அனுமதி பெற்ற பிறகு வீடியோ எடுக்க அனுமதி என்று அறிவித்திருக்கின்றனர். தற்போது இது தொடர்பான அறிக்கை தான் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Advertisement