நாயகியின் துணியை துவைத்த போது புகைப்படம் எடுத்து மனைவிக்கு அனுப்பிவிட்டனர் – அட, இந்த படத்தை பார்தீங்களா இல்லையா.

0
564
- Advertisement -

கதாநாயகியின் ஆடையை இயக்குனர் துவைத்து இருக்கும் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இயக்குனர் பிரவீன் இயக்கத்தில் மே மாதம் 27ஆம் ஓடிடி தளத்தில் வெளியாகி இருந்த படம் போத்தனூர் தபால் நிலையம். இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் தயாரித்திருந்தது. இந்த படத்தில் பிரவீன், அஞ்சலி ராவ், வெங்கட் சுந்தர் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். கோயம்புத்தூருக்கு அருகில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்று போத்தனூர்.

-விளம்பரம்-

கேரளாவுக்குச் செல்லும் சில ரயில்கள் கோயம்புத்தூர் வழியே செல்லாமல் போத்தனூர் வழியாகச் சென்று விடும். இதனால் கோவை, கேரளா மக்களுக்கு போத்தனூர் நன்றாகத் தெரிந்த ஒரு ஊர் என்றே சொல்லலாம். அப்படிப்பட்ட போத்தனூர் தபால் நிலையத்தில் 1990களில் நடக்கும் ஒரு பணத் திருட்டு சம்பவத்தை மையமாக வைத்து இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் பிரவீண். இவரது அப்பா அந்த தபால் நிலையத்தில் வேலை செய்து இருக்கிறார். அந்த கால கட்டத்தில் அவரை பாதித்த ஒரு விஷயத்தை வைத்து தான் இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் பிரவீன்.

- Advertisement -

போத்தனூர் தபால் நிலையம்:

இரண்டே நாளில் நடக்கும் ஒரு கதை தான் படம். படத்தின் நாயகன் பிரவீணின் அப்பா போத்தனூர் தபால் நிலையத்தில் போஸ்ட் மாஸ்டர் ஆக வேலை செய்கிறார். ஒரு வெள்ளிக்கிழமையில் தபால் நிலையத்தில் டெபாசிட் செய்ய பணம் வந்தது. அதோடு, ஏற்கெனவே இருக்கும் பணம் என மொத்தம் ஆறு லட்ச ரூபாயை வங்கியில் செலுத்தாமல் விட்டு விடுகிறார் கேஷியர். அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால் தபால் நிலையத்தில் அப்பணம் இருந்தால் பாதுகாப்பில்லை எனக் கருதி போஸ்ட் மாஸ்டர் அப்பணத்தை தன் வீட்டிற்குக் கொண்டு செல்கிறார்.

படத்தின் கதை:

ஆனால், செல்லும் வழியில் அந்தப் பணத்தை யாரோ திருடி விடுகிறார்கள். திங்கள் கிழமை காலைக்குள் அந்தப் பணத்தை தபால்நிலையத்தில் வைக்க வேண்டும். இல்லை என்றால் பெரிய ப்ரச்சனை ஆகி விடும். ஆகவே, இந்த சூழ்நிலையில் போஸ்ட் மாஸ்டரின் மகனான பிரவீண், தனது காதலி அஞ்சலி ராவ், நண்பன் வெங்கட் சுந்தர் ஆகியோர் உடன் சேர்ந்து திருடப்பட்ட பணத்தைக் கண்டுபிடிக்க முயல்கிறார். அதில் அவர்கள் வெற்றி பெற்றார்களா? இல்லையா? என்பது தான் படத்தின் மீதி கதை.

-விளம்பரம்-

படத்திற்கு பயன்படுத்திய கேமரா:

அது மட்டும் இல்லாமல் இந்த படத்தை black magic design என்ற ஒரு சிறிய கேமராவை வைத்து எடுத்து இருக்கிறார். அதற்கான புகைப்படம் வெளியாகி இருக்கிறது. மேலும், இந்த படத்திற்காக இயக்கம் மட்டுமில்லாமல் பல வேலைகளை இயக்குனர் பார்த்திருக்கிறார். இதை கடந்த சில நாட்களாகவே இவர் தன்னுடைய பதிவில் சம்பந்தப்பட்ட புகைப்படங்களுடன் பதிவிட்டிருக்கிறார். அதுவும் நேற்று ஒரு புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டது பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. அதாவது,படத்தின் கதாநாயகியின் ஆடைகளை அவரே துவைத்ததாக பதிவிட்டிருக்கிறார்.

இயக்குனர் பிரவீன் போட்ட பதிவு:

அதில் அவர், அனைத்து முக்கிய கதாபாத்திரங்களின் ஆடைகள் என்னால் மட்டுமே துவைக்கப்பட்டன. வாஷிங் மெஷின் பயன்படுத்தப்படவில்லை. ஏனென்றால், எங்களிடம் ஒரே ஒரு செட் மட்டுமே இருந்தது. அதை சில வருடங்களாக மெயின்டைன் செய்தாக வேண்டும். அதனால் நான் கதாநாயகியின் ஆடையைத் துவைத்த போது எனது உதவி இயக்குனர் இந்த புகைப்படத்தை எடுத்து எனது மனைவிக்கு அனுப்பிவிட்டார். அடுத்து என்ன நடந்திருக்கும் நீங்களே யூகியுங்கள் என்று பதிவிட்டிருக்கிறார். இப்படி இவரின் பதிவு நகைச்சுவையாக இருந்தாலும் சோசியல் மீடியாவில் பயங்கர பேசும் பொருளாகி இருக்கிறது.

Advertisement