இத வச்சிட்டு தான் எங்க பொன்னியின் செல்வன் படத்த கலாய்ச்சிட்டு இருக்கீங்க – பிரபாஸ் பட டீசரை வச்சி செய்யும் ரசிகர்கள்.

0
561
pabas
- Advertisement -

pan இந்திய படம், சமீப காலமாக சினிமா உலகில் அதிகம் கேட்கப்பட்டு வரும் ஒரு சொல். சமீப காலமாகவே திரைத்துறையில் வெளியாகும் படங்கள் பல மொழிகளில் வெளியாகி வருகிறது. அதற்கு Pan இந்தியா படங்கள் என்று பெயர் வைத்து விடுகின்றனர். அதிலும் குறிப்பாக மாஸ் ஹீரோக்கள் படங்கள் மற்றும் பிரம்மாண்ட செலவில் உருவாகும் படங்கள் அனைத்தும் அனைத்து மொழிகளிலும் வெளியாகிவிடுகிறது. பொதுவாக தமிழ் நடிகர்களின் படங்கள் தான் மற்ற மொழிகளில் வெளியாகும். மற்ற மொழி நடிகர்களின் படங்கள் தமிழில் டப்பிங் செய்து வெளியாவது குறைவு தான்.

-விளம்பரம்-

ஆனால், இந்த கூற்றை மாற்றியது பாகுபலி திரைப்படம் தான். ராஜமௌலி இயக்கத்தில் வெளியான நான் ஈ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுகு ஆகிய இரண்டு மொழிகளிலும் மாபெரும் ஹிட் அடைந்தது. இதனை தொடர்ந்து வெளியான பாகுபலி திரைப்படம் தமிழ், தெலுகு, இந்தி, கன்னடம், மலையாளம் என்று பல மொழிகளில் வெளியாகி ஹிட் அடித்து Pan இந்திய படம் என்ற அந்தஸ்தை பெற்றது.

- Advertisement -

இதையும் பாருங்க : “சாகும்முன் அனைவரும் பார்க்கவேண்டும்” – படத்தை பாராட்டி வைரமுத்து போட்ட பதிவு. ரசிகர்களின் கமெண்ட்ஸ்.

அதன் பின்னர் வந்த பாகுபலி 2வும் சரி, சமீபத்தில் வந்த புஷ்பா, RRR படமும் சரி Pan இந்திய லெவலில் வெற்றி பெற்றது. இப்படி தெலுங்கு படங்கள் Pan இந்திய அந்தஸ்தை பெற்று வந்த நிலையில் கன்னடத்தில் வெளியான Kgf திரைப்படமும் இந்திய அளவில் வெற்றி பெற்று Pan இந்தியா அந்தஸ்த்தை பெற்றது. ஆனால், தமிழ் சினிமாவில் சமீப காலமாக pan இந்திய அளவில் கொண்டாடப்பட்ட படங்கள் வெளியாகவில்லை.

-விளம்பரம்-

இறுதியாக ரஜினி நடித்த 2.0 திரைப்படம் தான் இந்திய அளவில் வெற்றி பெற்று அப்படி ஒரு அந்தஸ்தை பெற்றது. இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் இந்திய அளவில் பேசப்பட்டு வருகிறது. ஆனாலும் இந்த திரைப்படத்தை பாகுபலி படத்துடன் ஒப்பிட்டு தொடர்ந்து தெலுங்கு ரசிகர்கள் கேலி செய்து கொண்டு வருகிறார்கள். இதற்கு தமிழ் ரசிகர்களும் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

பாகுபலி திரைப்படத்திற்கு பின்னர் தான் தேர்வு சினிமா தென்னிந்திய அளவில் கவனத்தை ஈர்த்து இருந்தது தமிழில் எந்த படங்கள் வந்தாலும் அதனை பாகுபலி உடன் ஒப்பிட்டு தொடர்ந்து தெலுங்கு ரசிகர்கள் கேலி செய்து வந்து கொண்டு தான் இருக்கின்றனர் அந்த வகையில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தையும் கேலி செய்தனர். இப்படி ஒரு நிலையில் பாகுபலி நாயகன் பிரபாஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் ஆதி புருஷ் படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது.

தமிழ் உள்பட 5 மொழிகளில் இந்த படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.பாகுபலி படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பின்னர் பிரபாஸின் நடிப்பில் வெளிவந்த சாஹோ, ராதே ஷ்யாம் படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் பிரபாஸ் மற்றும் அவரது ரசிகர்கள் அடுத்து வெளிவரவுள்ள ஆதிபுருஷ் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பை வைத்து இருந்தனர், ஆனால், அந்த எதிர்பார்ப்பை இந்த டீசர் தவிடு பொடி ஆகியுள்ளது.

இந்த படத்தை பாகுபலி போல இருக்கும் என்று தெலுங்கு ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தார்கள். ஆனால், இந்த படம் அனிமேஷன் படமாக உருவாகி இருக்கிறது. இதனால் இது குழந்தைகளை திருப்திபடுத்தமே தவிர பிரபாஸ் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான். மேலும், இந்த படத்தின் தமிழ் டீசரை பார்த்த தமிழ் ரசிகர்கள் பலரும் இந்த டீஸரை வச்சி செய்து வருகின்றனர். இந்த படத்தின் டீசரை பார்க்கும் போது ரஜினி நடித்த கோச்சடையான் படம் தான் நினைவிற்கு வருகிறது.

அந்த படமும் இதே போல மோஷன் அனிமேஷன் டெக்னலாஜி கொண்டு எடுக்கப்பட்ட படம் தான். ஆனால், இந்த படத்தின் அனிமேஷன் படு மோசமாக அமைந்து இருப்பதால் இந்த படத்தை கார்ட்டூன், சுட்டி டிவி, சோட்டா பீம் போன்றவற்றுடன் ஒப்பிட்டு கலாய்த்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் பிரபாஸ் பார்ப்பதற்கு சீமான் போல தோற்றமளிக்கிறார் என்று சீமானுக்கு வாழ்த்துக்கள் என்று கூறி கலாய்த்து வருகின்றனர். மேலும், இத வச்சிட்டா பொன்னியின் செல்வன கலாய்ச்சீங்க என்றும் இந்த படத்தை தான் வாரிசுக்கு போட்டியாக இறக்க போகிறார்களா என்றும் கேலி செய்து வருகின்றனர்.

Advertisement