ஆதிபுருஷ் படத்தை தொடர்ந்து புராண கதையில் நடிக்கிறாரா பிரபாஸ்?

0
1305
- Advertisement -

இந்தியாவின் பிரபலமான நடிகர்களில் ஒருவர் பிரபாஸ். இவர் நடிப்பில் வந்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அதிலும், 2015 ஆம் ஆண்டு ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி படம் இந்திய அளவில் பிரபலமானது. தற்போது பான் இந்தியா படமாக பிரபாஸ் நடிப்பில் வெளியாகி உள்ள ஆதிபுருஷ் ராமாயணம் பற்றிய கதை. ராமாயணம் கதையை மையக்கமாக வைத்து பல படங்கள் எடுக்கப்பட்டாலும், இதுவரையில் எந்த படமும் தற்போது உள்ள நவீன தொழில் நுட்பத்தை தற்போது எடுக்கவில்லை.

-விளம்பரம்-

இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. அதோடு பாகுபலி நாயகன் பிரபாஸ் நடிப்பதினால் எதிர்பார்ப்பு இன்னமும் அதிகமானது. மேலும், இந்த ஆதிபுருஷ் திரைப்படமானது இராமாயணத்தில் வரும் யுத்த காண்டம் பற்றிய கதையாகும். ராமனாக பிரபாஸும் , சீதையாக கிருதி சனோனும், ராவணனாக சயீப் அலி கான் நடித்திருக்கிறார்கள். படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தை சந்தித்து இருக்கிறது.

- Advertisement -

அதோடு இந்த படத்திற்கு சிலர் ஆதிபுருஷ் படத்திற்கு ஆதரவு தெரிவித்தாலும் பலர் எதிர்ப்பு தெரிவித்து பதிவுகளை போட்டு வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் படத்தினுடைய கிராபிக்ஸ் ரொம்ப மோசமாக இருக்கிறது எல்லாம் விமர்சனம் செய்திருந்தார்கள். மேலும், இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று பலரும் கடிதம் எழுதி இருந்தார்கள். அது மட்டும் இல்லாமல் இந்த படத்தின் மீது வழக்கும் தொடர்த்து இருக்கிறார்கள்.

இந்நிலையில் நடிகர் பிரபாஸ் அடுத்து நடக்க உள்ள “புராஜெக்ட் கே” என்ற படமும் புராண கதையை சொல்லும் படமாக இருக்கும் என்று தெலுங்கு திரையுலக வட்டாரங்களில் கூறப்படுகிறது. கிடைத்துள்ள தகவல்களில் படி கடவுள் மகாவிஷ்ணுவின் கடைசி அவதாரமான கல்கி அவதாரத்தை வைத்து எடுக்கப்படும் கடைசி அவதாரத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் படம் என்றும் இதில் நடிகர் பிரபாஸ் விஷ்ணுவாக நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

-விளம்பரம்-

மேலும் புராண கதையையும் நவீன தொழில் நுட்பத்தையும் கலந்து இந்த படத்தை இயக்குனர் நாக் அஸ்வின் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. தீய சக்திக்கும் நல்ல சக்திக்கும் இடையே நடக்கும் யுத்தத்தில் இறுதியில் தீய சக்தியில் இருந்து உலகத்தை காப்பாற்றும் படியாக சயின்ஸ் பிக்சன் கதை களத்தில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு இந்த படத்தில் உலக நாயகன் கமலஹாசன், திஷா பதானி, தீபிகா படுகோன், அமிதாப் பச்சன் என பல முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இப்படிப்பட்ட நிலையில் தான் பிரபாஸ் விஷ்ணு என்றால் காமலஹாசனுக்கு என்ன கதாபாத்திரம், அமிதாப்பச்சனுக்கு என்ன கதாபாத்திரம் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும் சமீபத்தில் வெளியான ஆதிபுருஷ் படத்திற்கு ஏற்ப்பட்ட நிலைமை இந்த படத்திற்கும் வரக்கூடாது என்பதே பிரபாஸ் ரசிகர்களின் எண்ணமாக இருக்கிறது. எதுவாக இருந்தாலும் இந்த தகவல்கள் அதிகார பூர்வமாக கிடைத்த பின்னரே படத்தின் வெற்றி தோல்வி குறித்து பேசப்படும்.

Advertisement