ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்திய ஆதிபுருஷ் படம் குறித்து பிரபாஸ் போட்ட பதிவு பெரும் கேலிக்கு உள்ளாகி இருக்கிறது. இந்தியாவின் பிரபலமான நடிகர்களில் ஒருவர் பிரபாஸ். இவர் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த வர்ஷம் என்ற திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானர். பின் இவர் நடிப்பில் வந்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அதிலும், 2015 ஆம் ஆண்டு ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி படம் இந்திய அளவில் பிரபலமானது. இந்த படத்தின் மூலம் நடிகர் பிரபாஸ் பான் இந்திய ஸ்டாராக மாறினார்.
ஆதிபுருஷ் ராமாயணம் பற்றிய கதை. ராமாயணம் கதையை மையக்கமாக வைத்து பல படங்கள் எடுக்கப்பட்டாலும், இதுவரையில் எந்த படமும் தற்போது உள்ள நவீன தொழில் நுட்பத்தை தழுவி எடுக்கவில்லை. இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதிபுருஷ் படத்தின் மீது எதிர்பார்ப்பு நிலவியது. அதோடு பாகுபலி நாயகன் பிரபாஸ் நடிப்பதினால் எதிர்பார்ப்பு இன்னமும் அதிகமானது.
மேலும், இப்படத்தை ஓம் ராவத் இயக்க தயாரிப்பாளர் புஷன் குமார் தயாரித்து இருக்கிறார்.மேலும், ஆதிபுருஷ் திரைப்படமானது இராமாயணத்தில் வரும் யுத்த காண்டம் பற்றிய கதையாகும். ராமன் தன்னுடைய ராஜ்யமான அயோத்தியில் கிடையாது. 14 ஆண்டுகள் வனவாசம் மேற்கொள்கிறார். அப்போது அவருடன் பயணித்த அவரது மனைவி சீதை ராவணனால் நாடுகடத்தப்படுக்கிறார்.
பின் ராவணனை ஹனுமான் போன்றவர்களின் உதவியுடன் எப்படி வீழ்த்தி சீதையை காப்பாற்றினார் என்பது தான் மீதி கதை. இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் வெளியாகி இருக்கிறது.ஆனால், படம் வெளியாகி ரசிகர்களின் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அது மட்டும் இல்லாமல் இந்த படத்தினுடைய கிராபிக்ஸ் எல்லாம் மோசமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்திருந்திருக்கின்றனர்.
இந்த படம் வெளியான முதல் நாளில் இருந்தே இந்த படத்தை நெட்டிசன்கள் வச்சி செய்து வரும் நிலையில் இந்த படம் குறித்து பிரபாஸ் போட்டுள்ள பதிவு இந்த படத்தை மேலும் ட்ரோல் மெட்டிரியலாக மாறி இருக்கிறது. இந்த படம் வெளியானது முதல் நாளில் இருந்து தனது ட்விட்டர் பக்கத்தில் படம் சம்மந்தமாக எந்த பதிவையும் போடாத பிரபாஸ் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘ஆதிபுருஷ் படத்தில் உங்களின் பேவரைட் சீன் எது’ என்று பதிவிட்டு இருந்தார்.
பிரபாஸின் இந்த பதிவை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இந்த படத்தை கழுவி ஊற்றி வருகிறார்கள். ஆனால், பிரபாஸின் தீவிர ரசிகர்கள் படம் உண்மையில் நன்றாக இருக்கிறது என்று இன்னமும் படத்துக்கு முட்டு கொடுத்து வருகின்றனர். இதனை தொடர்ந்து இந்த பதிவையே நீக்கிவிட்டார் பிரபாஸ். இது ஒருபுறம் இருக்க இந்தப் படத்திற்கு வரும் எதிர்மறையான விமர்சனங்கள் குறித்து இந்த படத்தின் இயக்குனர் கூறியிருந்ததாவது பாக்ஸ் ஆபிஸில் படம் எந்த மாதிரியான வரவேற்பு இருக்கிறது என்பது தான் முக்கியம்.
அந்த வகையில் முதல் நாளில் இருந்தே உலகம் முழுவதும் படத்திற்கு நல்ல வசூல் கிடைத்து வருவது மகிழ்ச்சி. ராமாயணத்தை புரிந்து கொள்ளும் திறன் யாருக்கும் கிடையாது. நான் ராமாயணத்தை புரிந்து கொண்ட சிறு பகுதியில் இருந்து இந்த கதையை சித்தரிக்க முயற்சி செய்திருக்கிறேன். ராமாயணத்தை முழுமையாக புரிந்து கொண்டதாகச் சொன்னால் அவர்கள் கண்டிப்பாக முட்டாளாக இருப்பார்கள் அல்லது அவர்கள் பொய் சொல்லி இருப்பார்கள் என்று கூறி இருக்கிறார்.