மண்ணைக் கவ்விய மாபெரும் பட்ஜெட் படம் – சம்பளத்தில் பாதியை திருப்பி கொடுத்த பிரபாஸ் (பாதியே இத்தனை கோடியா)

0
372
Prabas
- Advertisement -

பொதுவாகவே சினிமா உலகில் நடிகர்களின் படங்கள் வெற்றி அடைவதும், தோல்வி அடைவதும் சகஜமான ஒன்று. அதுவும் சிறிய நடிகர்களின் படங்கள் தோல்வி அடைந்தால் அது பெரிதாகவே ரசிகர்கள் மத்தியில் பேசப்படுவதில்லை. ஆனால், பெரிய நடிகர்களின் படங்கள் தோல்வி அடைந்தால் மிகப்பெரிய சர்ச்சையை ஆகவே மாற்றி விடுகிறார்கள். மேலும், பெரிய நடிகர்களின் படங்கள் தோல்வி அடைந்தால் அந்த தயாரிப்பாளரை சமாதானப்படுத்துவதற்காக இன்னொரு திரைப்படம் நடித்துக் கொடுப்பதாக நடிகர்கள் கூறுவார்கள். இது வழக்கமான ஒன்று. இது தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் எல்லா மொழி நடிகர்கள் மத்தியிலும் நடைபெறுகிறது.

-விளம்பரம்-

ஆனால், யாரும் படம் தோல்வி அடைந்து விட்டால் சம்பளத்தை திருப்பிக் கொடுத்தது இல்லை. இதுவரை இந்த மாதிரியான தகவலும் வெளிவரவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் வெளியான திரைப்படம் மிகப்பெரிய அளவில் தோல்வி அடைந்ததை அடுத்து பிரபல நடிகர் ஒருவர் வாங்கிய சம்பளத்தில் 50 கோடி ரூபாயைத் திருப்பிக் கொடுத்துள்ள தகவல் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் வேற யாரும் இல்லைங்க, நம்ம பாகுபலி நடிகர் பிரபாஸ் தான்.

- Advertisement -

பிரபாஸின் திரைப்பயணம்:

டோலிவுட்டில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் பிரபாஸ். இவர் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த வர்ஷம் என்ற திரைப்படத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானர். அதன் பின் இவர் நடிப்பில் வெளி வந்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து உள்ளது. அதிலும் 2015 ஆம் ஆண்டு ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி படம் இந்திய அளவில் பிரபலமானது. இந்த படத்தின் மூலம் நடிகர் பிரபாஸ் அவர்கள் தெலுங்கில் மட்டும் இல்லாமல் பிற மொழிகளிலும் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சேர்ந்தார். இந்த படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோகளில் ஒருவராகி விட்டார் பிரபாஸ்.

பிரபாஸ் மற்றும் அனுஷ்கா குறித்த சர்ச்சை:

அதனை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளிவந்த சாஹோ படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதது. மேலும், 400 கோடிகளுக்கு மேல் இந்தப் படம் வசூல் செய்தது என்றும் கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, தெலுங்கில் முன்னணி நடிகர், நடிகையான பிரபாஸ் மற்றும் அனுஷ்கா பல ஆண்டுகளாக காதலித்து வருவதாக தெலுங்கு வட்டாரத்தில் ஒரு செய்தி பேசப்பட்டு தான் இருக்கிறது. ஆனால், இந்த செய்தி குறித்து இருவருமே இன்றுவரை ஒப்புக் கொள்ளாமல் தான் இருந்து வருகிறார்கள். சில மாதங்களுக்கு முன்னர் ஒரு இசை வெளியிட்டு விழாவின் போது பேசிய அனுஷ்கா, நானும் பிரபாஸும் நல்ல நண்பர்கள் எங்களுக்குள் காதல் இல்லை என்று தெளிவுபடுத்தினார்.

-விளம்பரம்-

பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த படம்:

அதேபோல் தான் பிரபாஸும் கூறிவந்தார். இப்படி இவர்கள் குறித்து சோசியல் மீடியாவில் சர்ச்சைகள் வந்தாலும் இருவரும் கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி உள்ள படம் ராதே ஷ்யாம். இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். மேலும், இந்த படம் தமிழ் தெலுங்கு கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் வெளியாகி இருந்தது. தென்னிந்திய மொழிகளுக்கு மட்டும் ஐஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார். இந்த படத்தில் இருந்து யுவன் பாடிய பாடல் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இதனால் இந்த படம் மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியானது.

பிரபாஸ் நஷ்ட ஈடு கொடுக்க காரணம்:

அதோடு இந்த படத்தின் கதை வித்தியாசமாக இருந்தாலும் இந்த படம் மிகவும் மெதுவாக நடந்தால் ரசிகர்களை கவரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் படம் மிகப்பெரிய தோல்வியை வசூல் ரீதியாக சந்தித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர்களுக்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் என்ற செய்திகள் வெளியானது. ஆகையால் இந்த படத்திற்காக வாங்கிய 100 கோடி ரூபாய் சம்பளத்தில் 50 கோடி ரூபாயை தயாரிப்பாளருக்கு நடிகர் பிரகாஷ் திருப்பிக் கொடுத்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இந்த தகவல் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அது மட்டுமில்லாமல் பிரபாஸின் இந்த செயலை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

Advertisement