தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் என்ற பெயரை யாராலும் மறக்க முடியாது. எம் ஜி ஆர் நடித்த காலம் தொடங்கி விஜய் நடித்த கால கட்டம் வரை பல்வேறு படங்களில் நடித்துள்ள சிவாஜி தான் நடிப்பு என்ற பெயரை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றவர் என்று கூறினால் அது மிகையாகாது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பராசக்தி திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அவரை தொடர்ந்து அவரது மகன்களான ராம் குமார் மற்றும் பிரபுவும் சினிமாவில் கால் பதித்தனர். இவர்களில் ராம் குமார் சினிமாவில் தயாரிப்புத் துறையையும், பிரபு நடிப்பு துறையையும் தேர்ந்தெடுத்து இன்றுவரை சிறப்பாக செயல்பட்டு வருகின்றார்.
இதையும் பாருங்க : ஐயனார் பக்கத்தில் போலீஸ் தோற்றத்தில் தந்தை சிலை.! சரவணன் கட்டிய கோவிலை பாருங்க.!
இதில் இளைய மகன் பிரபு இளைய திலகம் என்ற பட்டத்துடன் இன்றுவரை திரையுலகில் வெற்றிநடை போடுகின்றார். அவரது மகன் விக்ரம் பிரபு கும்கி திரைப்டத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி, இன்று வரை ஒரு நல்ல நடிகனாக வலம் வருகின்றார்.
1982 ஆம் ஆண்டு வெளியான ‘சங்களி’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகர் பிரபு . அதன் பின்னர் சிவாஜி கணேசன் நடித்த பல்வேறு படங்களில் சிறப்பு கதாபாத்திரத்திலும் துணை கதாபாத்திரத்திலும் நடித்தார் பிரபு. ஆனால், இவர் பல ஆண்டுகளுக்கு முன்னர் சிவாஜி படத்தில் கை குழந்தையாகவும் நடித்துள்ளார்.