அக்னி நட்சத்திரம் இல்ல, பிரபுதேவா குரூப் டான்சராக ஆடிய முதல் தமிழ் படம் இதான் – அதுவும் மணிரத்னம் படம் தான். எவ்ளோ சம்பளம் பாருங்க.

0
1712
prabhudeva
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவர் பிரபு தேவா. இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் நடன அமைப்பாளர், திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகங்களை கொண்டவர். இவர் பிரபலமான நடன ஆசிரியர் சுந்தரத்தின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபு தேவாவின் நடன திறமைக்காக இவரை இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் என்றும் அழைக்கிறார்கள். இவர் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடனம் ஆடி உள்ளார். தற்போது இவருடைய நடிப்பில் 4 படங்கள் வெளியாகக் காத்திருக்கின்றன.

-விளம்பரம்-

மைசூரில் திறந்து மயிலாப்பூரில் வளர்ந்த சிறுவன் தான் தற்போது இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் ஆக உருமாறி இருக்கிறார். நடிகர் பிரபு தேவா அவர்கள் சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே என பல படங்களில் தோன்றியிருந்தாலும். மேலும், மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, பிரபு நடித்த ‘அக்னி நட்சத்திரம் ‘ படத்தில் இடம்பெற்ற மிகப்பெரிய ஹிட் பாடலான ‘ராஜா ராஜாதி ராஜா’ என்ற பாடலில் கூட பிரபு தேவா தோன்றி இருப்பார்.

- Advertisement -

மௌன ராகம் படத்தில் பிரபுதேவா :

இதுதான் பிரபுதேவா தமிழில் குரூப் டான்சராக தோன்றிய முதல் படம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், இந்த படத்திற்கு முன்பாகவே பிரபு தேவா குரூப் டான்சராக ஆடி இருக்கிறார். அதுவும் மணிரத்னம் படம் தான். மணிரத்தினம் இயக்கிய மௌன ராகம் என்ற படத்தில் பணிவிழும் இரவு என்ற ஒரு பாடல் வரும். அந்த பாடலில் சில காட்சிகளில் பிரபுதேவா வருவார். அதில் நடித்ததற்காக மணிரத்தினம் பிரபுதேவாவிற்கு 500 ரூபாய் சம்பளம் கொடுத்து இருக்கிறார்.

தாடி பேகி பேண்ட் ரகசியம் :

இவர் ஹீரோவாக நடித்த முதல் படம் இந்து. பிரபு தேவா என்றதும் நினைவிற்கு வருவது பேகி பேண்ட்டும் தாடியும் தான். இந்த ‘பலூன் பேகி’ ரக பேன்ட்டை அறிமுகப்படுத்தி டிரெண்டாக்கியது பிரபுதேவா தான். ஆனால், இவரின் தாடிக்கும் பேகி பேண்டுக்கும் ஒரு காரணம் இருக்கிறது. இவர் தீவிர எம் ஜி ஆர் ரசிகர் என்பதால் தான் பேகி பேண்ட் மீது ஆர்வம் ஏற்பட்டு உள்ளது. அதே போல நடனம் ஆடும் போது பேண்ட் லூசுக இருப்பது சவ்கரியமாக இருந்ததால் அந்த ஸ்டைலை அப்படியே பாலோ செய்து விட்டாராம்.

-விளம்பரம்-

ரஜினியின் பாராட்டு :

இந்தப் பேண்ட் நல்லாயிருக்கு எங்க வாங்கனா என்று ஒருமுறை ரஜினி தன்னிடம் கேட்டதாக இவரே பேட்டியில் கூறியிருந்தார். அதே போல் பிரபுதேவா என்றதும் நம் நினைவுக்கு வருவது அவரது தாடி தான். எப்போதும் தாடி வைத்திருப்பதற்கான இரண்டு காரணங்களை இவர் சமீபத்தில் கூறியிருந்தார். அது மிகக் குறைவான வயதிலேயே மாஸ்டரானதால் தன்னை வயது முதிர்ச்சியோடு காட்டிக்கொள்வதற்காக தான் அப்படி தாடி விட ஆரம்பித்தாராம்.

prabu

தாடியின் ரகசியம் :

அதே போல எப்போதும் க்ளின் ஷேவ் செய்யாமல் தாடியுடன் இருக்கும் தனது அப்பாவை இன்ஸ்பிரேஷனாக கொண்டதானால் தாடி வைத்து இருப்பதாகவும் கூறினார். அதே போல நாம் இருவர் நமக்கு இருவர் படத்திற்க்காக தாடி எடுத்த போது படத்திற்காக இவ்வளவு செய்கிறோமே என்று நானே நினைத்துகொண்டேன். மேலும், எனக்கு தாடி வளராத நபர்களை பார்த்தால் பாவம் எப்படி தாடி இல்லாமல் இருக்கிறார்கள் என்று தோன்றும் என்றும் கூறி இருந்தார் பிரபுதேவா.

Advertisement