போக்கிரி பாடத்தின் இந்த சூப்பர் காட்சியில் பிரபுதேவா நடிச்சி பாத்திருக்கீங்களா ?

0
1564
pokiri
- Advertisement -

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் மகேஷ்பாபு. சமீபத்தில் ஸ்பைடர் என்ற படத்தின் மூலம் தமிழில் நேரடி கதாநாயகனாக களமிறங்கினார். மேலும் இவர் நடித்த பல படங்களின் ரீமேக்கில் தான் விஜய் நடித்து இருந்தார். அந்த திரைப்படங்கள் விஜய்க்கு மாபெரும் திருப்புமுனை படமாக அமைந்து இருந்தது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் கில்லி, போக்கிரி போன்ற படங்கள் இவர் நடித்த படங்களிலிருந்து ரீமேக் செய்யப்பட்ட படங்கள் தான். அதிலும் போக்கிரி திரைப்படம் விஜய்க்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.

-விளம்பரம்-

போக்கிரி படத்திற்கு முன்னர் பிரபுதேவா தெலுங்கில் இரண்டு படங்களை இயக்கி இருந்தார். அந்த இரண்டு படங்களுமே மிகப்பெரிய வெற்றியடைந்தது. இதைத்தொடர்ந்து தமிழில் இவர் போக்கிரி படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். போக்கிரி திரைப்படம் ரீமேக் படம் என்றாலும் தமிழில் பிரபுதேவா இயக்கிய முதல் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் விஜய், அசின், பிரகஷ் ராஜ், வடிவேலு, நெப்போலியன், நாசர், ஆனந்தராஜ் என்று பல்வேறு நட்சத்திர பட்டாளமே நடித்து இருந்தார்கள்.

- Advertisement -

போக்கிரி திரைப்படத்திற்கு முன்னர் விஜய் நடிப்பில் வெளியான சிவகாசி திரைப்படத்தை தவிர சுக்கிரன் சச்சின் ஆதி போன்ற தொடர் தோல்விகளை சந்தித்தார் விஜய் போக்கிரி திரைப்படம் தான் விஜய்க்கு ஒரு திருப்புமுனை படமாக அமைந்தது இந்த படத்திற்கு பின்னர் விஜய் மற்றும் பிரபுதேவா கூட்டணியில் வில்லு திரைப்படம் வெளியானது ஆனால் அந்த திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது போக்கிரி படத்தில் விஜய்யின் பாடி லாங்குவேஜ் அனைத்தும் மகேஷ்பாபுவை போலவேதான் இருந்தது

அதேபோல இந்த படத்தில் விஜய்யின் பாடி லாங்குவேஜ் பெரும்பாலான இடங்களில் பிரபுதேவா போலவே இருந்தது அதற்கு காரணம் இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் பிரபுதேவா விஜய்க்கு அவ்வளவு தெளிவாக விளக்கி இருந்தாராம். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் வரும் ஒரு மாஸ் காட்சியை பிரபுதேவா விஜய்க்கு நடித்துக்காட்டிய புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement