நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவா தென்னிந்திய சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவர் பிரபு தேவா. இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் நடன அமைப்பாளர், திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகங்களை கொண்டவர். .பிரபுதேவா 1995 இல் ராம்லதா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.இவர்களுக்கு விஷால், ரிஷி ராகவேந்திர தேவா ,ஆதித் தேவா என்று 3 மகன்கள் பிறந்தனர். இதில் பிரபுதேவாவின் மூத்த மகனான விஷால் தனது 12 வயதில் 2008 இல் காலமானார்.
அதன் பின்னர் பிரபுதேவா நடிகை நயன்தாராவின் காதல் மலர்ந்தது. பிரபுதேவா, நயன்தாராவுடனான பிரச்சனையால் தனது மனைவியை விவாகரத்து செய்தார். பின்னர் தனியாக தான் வாழ்ந்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து இவர்கள் இருவரும் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தையை பெற்றெடுத்து நயன்தாரா விக்னேஷ் ஷிவனிடம் சந்தோசமாக வாழ்ந்து வருகிறார்.
நேற்று தான் நயன்தாராவிற்கு முதல் திருமண நாள் கூட சென்று இருந்தது. இப்படி ஒரு நிலையில் பிரபு தேவா தனது உறவுக்கார பெண் ஒருவரை திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் நடிகர் பிரபு தேவாவிற்கு ஏற்கனவே திருமணம் முடிந்துவிட்டது என்று பாலிவுட் வட்டாரத்தில் செய்திகள் வெளியானது. கடந்த சில காலமாக பிரபுதேவா முதுகுவலி பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தார் என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான்.
அந்த முதுகுவலி பிரச்சினையை சரி செய்வதற்காக பிசியோதெரபிஸ்ட் ஒருவரிடம் பிரபுதேவா சிகிச்சை பெற்று வந்தாராம். அவருக்கு சிகிச்சை பார்த்தது ஒரு பெண் மருத்துவர் தானம். முதுகு வலிக்காக அந்த பெண் டாக்டரிடம் சிகிச்சை பெற்றுவந்த பிரபுதேவாவிற்கு காதல் ஏற்பட்டதால் காதும் காதும் வைத்தது போல பிரபுதேவா திருமணத்தையே முடித்து விட்டார் என்று செய்திகள் வெளியானது. மேலும் பிரபுதேவாவிற்கு இரண்டாம் திருமணம் முடிந்தது உண்மை தான் என்று அவரது சகோதரர் ராஜு சுந்தரமும் கூறி இருந்தார்.
ஆனால், இதுநாள் நாள் வரை பிரபுதேவாவின் இரண்டாம் மனைவியை வெளியில் காட்டவில்லை. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பிரபுதேவா தன்னுடைய ஐம்பதாவது பிறந்தநாளை கொண்டாடியிருந்தார். அப்போது பிரபுதேவாவின் இரண்டாவது மனைவி வீடியோ மூலம் தோன்றி அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் பிரபு தேவாவின் இரண்டாம் மனைவிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
பிரபுதேவாவிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பே குழந்தை பிறந்திருக்கிறது. குழந்தை நல்லபடியாக பெற்றெடுத்த மகிழ்ச்சியில் தான் பிரபுதேவா மற்றும் அவரது மனைவி இருவரும் சமீபத்தில் திருப்பதி கோயிலுக்கு சென்று வந்திருக்கிறார்கள். அதேபோல பிரபுதேவாவின் தந்தை சுந்தரம் மாஸ்டருக்கு ராஜூ சுந்தரம், பிரபுதேவா, நாகேந்திர பிரசாத் என்று மூன்றும் ஆண் பிள்ளைகள் தான். அதே போல பிரபுதேவாவின் முதல் மனைவிக்கு பிறந்த மூன்று பிள்ளைகளும் ஆண் பிள்ளைகள் தான. மேலும் ராஜசுந்தரம் மற்றும் நாகேந்திர பிரசாத் ஆகிய இருவருக்கும் ஆண் பிள்ளைகள் தான். எனவே. சுந்தரம் மாஸ்டர் வம்சத்தில் இதுதான் முதல் பெண் வாரிசு என்பதால் சுந்தர மாஸ்டர் குடும்பமே மகிழ்ச்சியில் இருக்கிறார்களாம்